சென்னை: தமிழ்நாட்டில் தெருவுக்குத் தெரு கட்சிகள் குவிந்து கிடந்தாலும் கூட இதுவரை மொத்தமே 10 கட்சிகளே அங்கீகாரம் பெற்றுள்ளன. பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது அங்கீகாரத்தை இழந்து நிற்கின்றன.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இதுவரை மாநிலக் கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை தேசியக் கட்சிகளாக உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் எவை என்று பார்த்தால் திமுக, அதிமுக, இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேமுதிக ஆகியவை மட்டும்தான்.
தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளாக வலம் வரும் விடுதலைச் சிறுத்தைகள், பாமக, மதிமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்து விட்டன. அவை அங்கீகரிக்கப்படாத கட்சிகளாகவே கருதப்படும்.
ஒவ்வொரு கட்சிக்கும் சில நிபந்தனைகள் உண்டு.அதைப் பூர்த்தி செய்தால்தான் அவர்களுக்கு மாநிலக் கட்சி அல்லது தேசியக் கட்சி அங்கீகாரம் கிடைக்கும். சமீபத்தில் இவற்றைப் பூர்த்தி செய்த ஆம் ஆத்மி கட்சிக்கு தேசியக் கட்சி அந்தஸ்து கிடைத்தது. பூர்த்தி செய்யத் தவறிய தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், திரினாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தேசியக் கட்சி அந்தஸ்து பறி போனது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் என்ன கொடுமை என்றால் சமீப ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களிடையே பேசு பொருளாகவும், தவிர்க்க முடியாத அரசியல் சக்திகளாகவும் திகழ்ந்து வரும் நாம் தமிழர் கட்சிக்கு இன்னும் மாநிலக் கட்சி அந்தஸ்துகூட கிடைக்கவில்லை. அதேபோல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் அங்கீகாரம் பெறாத கட்சியாகவே வலம் வந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலாவது இந்த இரு கட்சிகளும் அங்கீகாரம் பெரும் வகையில் "பெர்பார்மன்ஸ்" செய்வார்களா என்ற பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
{{comments.comment}}