ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 11,344 பட்டுச் சேலைகள்.. இன்று தமிழக அரசிடம் ஒப்படைப்பு

Feb 14, 2025,04:59 PM IST

பெங்களூரு: ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை இன்று தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி பெங்களூர் கோர்ட்டில் தொடங்கியது.


1996ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து 27 கிலோ தங்க நகைகள், 800 கிலோ வெள்ளி, வைர நகைகள்,11,344 விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்கு விசாரணை பெங்களூரு  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் பெங்களூரு கருவூலத்தில் வைக்கப்பட்டது.


இந்த வழக்கு விசாரணையில் இருந்த போது, 2016ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் காலமானார்.  அவர் குற்றவாளி என உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், நகைகள் பெங்களூரில் உள்ள கருவூலத்தில் தான் இருந்தது. இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தில் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர், ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விட வேண்டும் என்றும், அதில் கிடைக்கும் பணத்தில் நலத்திட்ட உதவிகள் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார். இவரை அடுத்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனக்கு இதில் உரிமை உண்டு எனவும், நகைகளை தன்னிடம் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். 




இந்நிலையில், இந்த நகைகளை தமிழ்நாடு அரசிடம்  கடந்த ஆண்டு 6 மற்றும் 7ம் தேதிகளில் ஒப்படைக்க சிறப்பு நீதிபதி உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் வழங்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தீபாவின் கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது.


இதையடுத்து பெங்களூரு சிறப்பு கோர்ட் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் பிப்ரவரி 14 மற்றும் 15ம் தேதிகளில் ஒப்படைக்கும்படி கடந்த மாதம் ஜனவரியில் உத்தரவிட்டது. இந்தநிலையில், பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் ஜெயலலிதாவின் நகைகள் சரிபார்க்கப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. வவ்வாலிலிருந்து மனிதர்களுக்கு பரவுமாம்!

news

2000 கோடி அல்ல.. 10000 கோடியே கொடுத்தாலும் சரி.. கையெழுத்துப் போட மாட்டோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரதமர் நரேந்திர மோடியின்.. முதன்மைச் செயலாளரானார்.. சக்திகாந்த தாஸ்.. ஓய்வுக்குப் பின் புதுப் பதவி!

news

தான் யார்.. எதற்காக வந்தோம் என்பதே கமல்ஹாசனுக்குப் புரியலையே.. தவெகவின் அதிரடி தாக்கு!

news

பிப்., 26ல் தவெகவின் ஆண்டு விழா.. 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி..!

news

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா vs பாகிஸ்தான்.. நாளைக்கு ஜெயிக்காம விட்ரக் கூடாதுடா பரமா!

news

அனல் பறக்கும் பேச்சாளர்.. அதிரடி டிபேட்டர்.. நாம் தமிழர் கட்சியின் அடையாளம்.. யார் இந்த காளியம்மாள்?

news

தங்கச்சி காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகிக்கலாம்.. ரொம்ப நன்றி என்று சொல்வோம்.. சீமான்

news

சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கா?.. பரபரக்கும் இன்விடேஷன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்