வேற லெவலுக்கு மாறும் மாடி ரயில்.. கையகப்படுத்தும் தமிழ்நாடு அரசு.. இனி லாபம்தான்!

May 07, 2023,04:34 PM IST
சென்னை:  தெற்கு ரயில்வேயின் கீழ் வரும் மாஸ் ரேபிட் டிரான்சிஸ் சிஸ்டம் எனப்படும் எம்ஆர்டிஎஸ் ரயில் சேவையை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தப் போகிறது. இதனால் இனி இந்த ரயில் சேவையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாடி ரயில் என்று சென்னை மக்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்த எம்ஆர்டிஎஸ் சேவை சென்னையின் கிழக்குப் பகுதி மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. வேளச்சேரி முதல் பீச் வரையிலான இந்த சேவை சென்னை மக்களுக்கு நீணஅ்ட காலமாக சேவையாற்றி வருகிறது. ஆனால் இதுவரை இது லாபம் சம்பாதிக்கவே இல்லை. ஆண்டுக்கு ஆண்டு நஷ்டம்தான் அதிகரித்து வருகிறது.

இந்த ரயிலில் குறைந்தபட்ச கட்டணமே ரூ. 5தான். மேலும் பெரியஅளவில் கூட்டமும் வருவதில்லை. இதனால் இந்த ரயில் சேவை தொடர்ந்து நஷ்டத்தில்தான் இயங்கி வருகிறது.  கடந்த ஆண்டு மட்டும் ரூ. 84.10 கோடி நஷ்டத்தை இது சந்தித்தது. இதன் காரணமாக ரயில் நிலையங்களைப் பராமரிப்பது , ரயில் பெட்டிகளைப் பராமரிப்பது போன்றவை சிரமத்தில் உள்ளன.




இதையடுத்து இந்த ரயில்சேவையை தமிழ்நாடு அரசு வாங்கி தானே நடத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும் குறைந்தபட்ச கட்டணத்தையும் ரூ. 10 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளையும் மாற்றவும், ரயில் நிலையங்களை நவீனமாக்கவும்  திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தையும், கூடவே வருமானத்தையும் ஏற்படுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே தற்போது ஆண்டுக்கு ரூ. 100 கோடியை பராமரிப்பு, ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்டவற்றுக்காக செலவிட்டு வருகிறது. ஆனால் டிக்கெட் கட்டணம் சரிவர இல்லை. கடந்த ஆண்டு டிக்கெட் கட்டணம் வெறும் ரூ. 17.25 கோடிதான். 

இதனால் இந்த ரயில்சேவையை முழுமையாக மாநில அரசே எடுத்து நடத்தத் திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை எப்படி சிறப்பாக நடைபெறுகிறதோ அதேபோல இந்த எம்ஆர்டிஎஸ் சேவையையும் மாற்றும் திட்டத்தில்  தமிழ்நாடு அரசு உள்ளது. ரூ. 500 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கு இந்த சேவையை ரயில்வேயிடமிருந்து தமிழ்நாடு அரசு பெறும் என்று தெரிகிறது.



இதை இரு கட்டமாக செயல்படுத்த முன்னதாக திட்டமிடப்பட்டது. அதாவது ரயில் நிலையங்களை வர்த்தக ரீதியாக லாபகரமாக  மாற்றும் பணியை முதலில் சிஎம்டிஏ செய்யும். ரயில்களை இயக்குவது, பராமரிப்பதை ரயில்வே பார்த்துக் கொள்ளும். அடுத்த கட்டமாக மொத்தமாக ரயில்கள் உள்ளிட்டவற்றை சிஎம்டிஏ கையகப்படுத்தும்.  ஆனால் இது நடைமுறைக்கு வரவில்லை.

இந்த நிலையில் தற்போது இந்தத் திட்டம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. விரைவில் இதுதொடர்பான முடிவுகள்  எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

சிலருக்கு வயிற்றெரிச்சல்.. அவர்கள் பேசட்டும்.. நாம் சாதிப்போம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

news

Orange Alert: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு.. இன்று.. மிக கன மழைக்கான எச்சரிக்கை!

news

EXCLUSIVE: எடப்பாடி பழனிச்சாமியை இழுக்க தீவிரம்.. புதுச்சேரி புள்ளியை கையில் எடுத்த பாஜக!

news

யாரு பயந்தா.. கருணாநிதி, ஜெயலலிதாவை விட பெரிய தலைவரா?.. விஜய்யை மீண்டும் சீண்டும் சீமான்

news

வட தமிழ்நாட்டை நோக்கி நகர்கிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு.. 18ம் தேதி வரை மழை நீடிக்கும்

news

2026 தேர்தலில் திமுகவின் எதிரி யார்?.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன ஸ்டன்னிங் பதில்!

news

சென்னை: பெரிதாக மழை தேங்கவில்லை.. புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை.. துணை முதல்வர் உதயநிதி

news

EXCLUSIVE: விஜய்யின் அடுத்த அதிரடி...தீயாய் வேலை செய்யும் நிர்வாகிகள்..கம்ப்யூட்டர்கள் திணறுகிறதாம்!

news

கங்குவா.. 14ம் தேதி 9 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி.. அதிகாலைக் காட்சிக்கு நோ பெர்மிஷன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்