சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடுத்த வருடம் ரொம்பப் பிடிச்ச மாசம் எதுன்னு கேட்டா, கண்ணை மூடிட்டு ஜனவரின்னுதான் சொல்வாங்க.. ஏன்னா, அடுத்த வருடத்தில், அதிக அளவிலான அரசு விடுமுறை நாட்கள் ஜனவரியில்தான் வருது.
தமிழ்நாடு அரசு, 2025ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. இதில் மாத வாரியாக பார்த்தால் ஜனவரியில்தான் அதிக அளவிலான விடுமுறைகள் வருகின்றன. மேலும் தமிழ்ப் புத்தாண்டு தினம் ஏப்ரல் 14ம் தேதிதான் கொண்டாடப்படவுள்ளது. திமுக அரசில் இது வழக்கமாக ஜனவரி 14ம் தேதி பொங்கல் நாளன்றுதான் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை ஏப்ரல் 14ம் தேதிதான் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத வாரியாக எந்தெந்த நாட்களுக்கு விடுமுறை என்ற விவரத்தைப் பார்ப்போம்.
ஜனவரி
ஜனவரி 1- ஆங்கிலப் புத்தாண்டு (புதன்கிழமை)
ஜனவரி 14- பொங்கல் (செவ்வாய்க்கிழமை)
ஜனவரி 15 - திருவள்ளுவர் தினம் (புதன்கிழமை)
ஜனவரி 16 - உழவர் திருநாள் (வியாழக்கிழமை)
ஜனவரி 26 - குடியரசு தினம் (ஞாயிற்றுக்கிழமை)
பிப்ரவரி
பிப்ரவரி 11 - தைப்பூசம் (செவ்வாய்க்கிழமை)
மார்ச்
மார்ச் 30 - தெலுங்கு வருடப் பிறப்பு (ஞாயிற்றுக்கிழமை)
மார்ச் 31 - ரம்ஜான் (திங்கள்கிழமை)
ஏப்ரல்
ஏப்ரல் 1 - வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு
ஏப்ரல் 10 - மகாவீரர் ஜெயந்தி (வியாழக்கிழமை)
ஏப்ரல் 14 - தமிழ்ப் புத்தாண்டு, டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் (திங்கள்கிழமை)
ஏப்ரல் 18 - புனித வெள்ளி (வெள்ளிக்கிழமை)
மே
மே 1 - மே தினம் (வியாழக்கிழமை)
ஜூன்
ஜூன் 7 - பக்ரீத் (சனிக்கிழமை)
ஜூலை
ஜூலை 6 - முஹர்ரம் (ஞாயிற்றுக்கிழமை)
ஆகஸ்ட்
ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம் (வெள்ளிக்கிழமை)
ஆகஸ்ட் 16 - கிருஷ்ண ஜெயந்தி (சனிக்கிழமை)
ஆகஸ்ட் 27 - விநாயகர் சதுர்த்தி (புதன்கிழமை)
செப்டம்பர்
செப்டம்பர் 5 - மிலாடி நபி (வெள்ளிக்கிழமை)
அக்டோபர்
அக்டோபர் 1 - ஆயுத பூஜை (புதன்கிழமை)
அக்டோபர் 2 - விஜயதசமி (வியாழக்கிழமை)
அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி (வியாழக்கிழமை)
அக்டோபர் 20 - தீபாவளி (திங்கள்கிழமை)
டிசம்பர்
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் (வியாழக்கிழமை)
இருப்பதிலேயே பாவப்பட்ட மாதம் இந்த நவம்பர்தான்.. அந்த மாதத்தில்தான் ஒரு நாள் கூட அரசு விடுமுறை கிடையாது. அதிகபட்ச விடுமுறை மாதங்களின் வரிசையில் முதலிடத்தில் ஜனவரியும் (5 நாட்கள்), 2வது இடத்தில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் (தலா 4 நாட்கள்) மாதங்களும் உள்ளன. 3வது இடத்தில் ஆகஸ்ட் மாதம் வருகிறது. இந்த மாதத்தில் 3 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது.
இதில் ஜனவரி மாதம் 17ம் தேதி ஒரு நாள் லீவு போட்டால் மொத்தம் 6 நாட்கள் பொங்கலுக்கு லீவு கிடைக்கும் லட்டு போன்ற வாய்ப்பும் உள்ளது. அனேகமாக அந்த விடுமுறையை அரசே கொடுத்தாலும் கொடுக்கலாம் என்ற தித்திப்பான எதிர்பார்ப்பிலும் அரசு ஊழியர்கள் உள்ளனர்.
{{comments.comment}}