சென்னை: மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சலுகை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை ரூபாய் 1000 என்பதை ரூ.1500 ஆக உயர்த்தி முதல்வர் வழங்கினார். அத்துடன், தற்போது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையையும் உயர்த்தி அவர்கள் ஊக்கமுடன் கல்வி கற்க உதவி செய்துள்ளார்.
பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களின் 1 முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு 1000 என்பதை இரு மடங்காக உயர்த்தி ரூபாய் 2000 என்றும், 6ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு 3000 என்பதை இரு மடங்காக உயர்த்தி 6000 என்றும், 9ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு ரூ. 4000 என்பதை இருமடங்காக உயர்த்தி ரூ.8 ஆயிரம் என்றும் உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
அதேபோல, கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை 6000 என்பதை 12,000 என இரு மடங்காக உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார். மேலும், தொழில் கல்லூரிகளிலும், பட்ட மேற்படிப்புகளிலும் படிக்கின்ற மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ரூ. 7000 என்பதை 14,000 ஆக இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.
இப்படி, மாற்றுத்திறனாளிகள் உள்ளங்களில் தேங்கி கிடக்கும் ஏக்க உணர்வுகளை தீர்க்கும் வகையில் அவர்களுக்கு அனைத்து வகைகளும் முதல்வர் மு க ஸ்டாலின் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் அவர்கள் அனைவரும் பயன் பெறும் வகையிலும் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி ஊக்கத் தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி அதற்காக ரூபாய் 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் அனுமதித்து செப்டம்பர் 10.9.2024 அன்று ஆணை பிறப்பித்துள்ளார்.
பள்ளி, கல்லூரி படிப்புகளுடன் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக அவர்கள் ஆராய்ச்சி படிப்புகளிலும் ஈடுபட வேண்டும் என்று விழைவோடு ஆராய்ச்சி படிப்பில் சேரும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு ஊக்கம் அளிப்பதற்காக முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின் தலா ஒரு லட்சம் வீதம் 50 மாற்று திறனாளிகள் பயன்பெறும் வகையில் 50 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}