மழை வெள்ளத்தால்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு.. ரூ. 6000 நிவாரண உதவி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Dec 09, 2023,04:43 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு தலா ரூபாய் 6000 நிவாரண உதவித் தொகையாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


மிச்சாங் புயல்  எதிரொலியால் சென்னை முழுவதும் பல இடங்கள் பாதிக்கப்பட்டது. சென்னை மட்டுமல்லாமல், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், மேலும் பல கடலோர மாவட்டங்களிலும், பல பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்தன. 


வெள்ளம் சூழ்ந்து கொண்டதால்,  மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிட்டது. வெள்ள நிவாரணப் பணிகள் தொடரந்து நடந்து வருகின்றன. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சென்னை வந்து  வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அவர் ஆலோசனையும் நடத்தினார். அடுத்து மத்திய குழுவும் வரவுள்ளது.




இந்த நிலையில் தற்போது வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தமிழ்நாடு அரசு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. முன்னதாக,  வெள்ள பாதிப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 


இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் சாலைகள், ஏரிகள், உட்கட்டமைப்பு, மனித உயிர்கள் இழப்பு, கால்நடைகள் உயிரிழப்பு, வீடுகளில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து நிவாரண உதவிகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன் முக்கிய அம்சங்கள்:


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக ரூபாய் 6 ஆயிரம் உதவி  தொகை வழங்கப்படும். இவை ரேஷன் கடைகள் மூலமாக அளிக்கப்படும்.


முழுமையாக சேதமடைந்த மானாவரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 8500. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம். சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 8000.  முழுமையாக சேதமடைந்த நெற் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 17,000. 




பல்லாண்டு பயி்கள், மரங்களுக்கு  ஹெக்டேருக்கு ரூ. 22,500.. எருது, பசு போன்ற கால்நடை உயிரிழப்புகளுக்கு ரூ. 37,500.  வெள்ளாடு, செம்மறி ஆடு போன்றவற்றின் உயிரிழப்புக்கு ரூ. 4000. முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ. 50,000. பகுதி சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ. 15,000. முழுமையாக சேதமடைந்த வல்லங்களுக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். 


முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கு மானியத் தொகையாக ரூ. 7.50 லட்சம் வழங்கப்படும். சேதமடைந்த வலைகளுக்கு ரூ. 15,000 வழங்கப்படும். 




புயல் மழையால் இறந்த குடும்பங்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட  பகுதியில் உள்ள நியாய விலை கடை மூலம் மக்களுக்கு ரொக்கமாக வழங்கப்படும்  என முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்