மகா கும்பமேளாவில் புனித நீராடிய.. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி..!

Feb 22, 2025,03:06 PM IST

லக்னோ: பிரயாக்ராஜ்ஜில்  நடைபெற்று வரும் மகா கும்பமேளா இன்னும் நான்கு நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவரது குடும்பத்துடன் புனித நீராடினார்.


உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் எனும் இடத்தில் கங்கா, நர்மதா, சரஸ்வதி, என்ற மூன்று ஆறுகள் சந்திக்கும் திரிவேணி சங்கமத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல்  மகாசிவராத்திரி வரை மொத்தம் 44 நாட்கள் மகா கும்பமேளா கொண்டாடப்பட்டு வருகிறது. மகா கும்பமேளாவில் புனித நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


அதாவது 144 வருடங்களுக்குப் பிறகு தற்போது நடைபெற்று வரும் இந்த மகா கும்பமேளாவில் பண்டிதர்கள், ஞானிகள், போகிகள்,  ரிஷிகள், முக்கிய பிரபலங்கள், தலைவர்கள் மற்றும் பக்தர்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பமேளாவில் நீராடி உள்ளனர். இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி, உலகத்திலேயே மிகப்பெரிய விழாவாகவும், உலக மக்கள் ஒன்றாகக் கூடி கொண்டாடும் விழாவாகவும் UNESCO அங்கிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த நிலையில், பிரயாக்ராஜ்ஜில் தற்போது நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிறைவடைய இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி,அவரது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளார். அங்கு நடைபெற்ற காசி தமிழ் சங்கம் விழாவிலும் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது,


பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்த எண்ணற்ற கோடிக்கணக்கான ஹிந்துக்களுடன் சேர்ந்து, பிரயாக்ராஜ்ஜின் புண்ணிய தீர்த்தமான திவ்ய, பவ்ய மகாகும்பத்தில் புனித நீராடி, தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளின் நல்வாழ்வுக்காகவும், நமது மாபெரும் தேசமான பாரதத்தின் இணக்கமான வளத்துக்காகவும்  வேண்டி வழிபட்டேன். இங்கு காற்றில் பரவியுள்ள தீவிரமான நேர்மறை சக்தி அனைவரையும் ஆழமாகத் தொட்டு, மற்றவர்களுடன் இணைக்கிறது. சுமார் 60 கோடி சனாதனிகள் ஏற்கெனவே புனித நீராடிய இந்த தனித்துவமான மற்றும் பிரம்மாண்டமான சனாதன தர்ம விழா, மறுமலர்ச்சியடைந்த ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உறுதியான சான்றாகும் என பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

அதிகம் பார்க்கும் செய்திகள்