மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

Sep 18, 2024,01:34 PM IST

நாகப்பட்டினம்:   நாகப்பட்டனம், தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.


நாகை மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வந்தார். நேற்று மதியம் சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு மதியம் 2 மணி அளவில் வந்தடைந்தார். அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக நாகை மாவட்டம் வேதாரண்யம் சென்றார். வேதாரண்யம் அருகே அகஸ்தியம் பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து உப்பு சத்தியாகிரகப் போராட்ட காட்சி விளக்க மையத்தைப் பார்வையிட்டார். அங்கிருந்து சென்று வேளாங்கண்ணியில் தங்கினார்.




நாகை வந்த ஆளுநரை, நாகை மாவட்ட வருவாய் அலுவலர் பேபி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். இதற்கிடையே ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடியுடன் சாலை மாறியலில் ஈடுபட்டனர்.


இன்று நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 9வது பட்டமளிப்ப விழாவில் கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவின் முதன்மை விருந்தினராக மும்பை மத்திய மீன்வளக் கல்வி நிறுவனத்தின் இயக்குனரான ரவிசங்கர் கலந்து கொண்டார். தொடர்ந்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் ஆளுநர் ரவி வழங்கினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இதில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல மாவட்ட ஆட்சித் தலைவரும் விழாவில் பங்கேற்கவில்லை.


முன்னதாக, பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நாகப்பட்டினம் சென்ற தமிழக ஆளுநர் ரவி, உலகப் புகழ் பெற்ற அன்னை வேளாகண்ணி மாதா ஆலயத்தில் பிரார்த்தனை செய்தார். தமிழ்நாடு மக்களின் நலனுக்காக ஆளுநர் அவரது மனைவியுடன் பிரார்த்தனை மேற்கொண்டதாக கவர்னர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில்  கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்