ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Apr 22, 2025,06:41 PM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பல்வேறு பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டமசோதாக்கள் உள்ளிட்ட 10 மசோதாக்களை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து தமிழ்நாடு ஆளுநர் வசம் இருந்த பல முக்கிய அதிகாரங்கள் தற்போது தமிழ்நாடு அரசு வசம் வந்துள்ளது. அதேசமயம், தமிழ் பல்கலைக்கழகம் தவிர்த்து பிற பல்கலைக்கழகங்களின் வேந்தராக தொடர்ந்து ஆளுநர் ஆர். என். ரவிதான் நீடித்து வருகிறார்.


உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் கூட்டியிருந்தார். இந்த நிலையில் தற்போது ஆளுநர் ஆர். என். ரவியும் ஒரு துணைவேந்தர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். ஊட்டியில் வைத்து இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இது சலசலப்பையும், திமுக கூட்டணியினரின் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. இருப்பினும் திட்டமிட்டபடி ஆளுநர் கூட்டியுள்ள துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.




தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


தமிழ்நாட்டில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் - நிறுவனங்களின் துணை வேந்தர்களின் வருடாந்திர மாநாடு ஏப்ரல் 25 மற்றும் 26 தேதிகளில் ஆளுநர் மாளிகை உதகமண்டலத்தில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து ஏப்ரல் 25 அன்று துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி தமிழ்நாடு மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் மாநாட்டுக்கு தலைமை தாங்க உள்ளார்.


துணைவேந்தர்கள் மாநாட்டின் நோக்கம் தேசிய கல்விக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துதல், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்வி சார் ஒத்துழைப்பு, கற்றலின் சிறப்புகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, கல்வி நிறுவனங்களில் நிதி மேலாண்மை, ஆராய்ச்சி சிறப்பம்சங்கள், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் திறன் வளர்ச்சி, மாற்று திறனாளிகளின் மறுவாழ்வு மற்றும் தொழில் குறித்த விரிவான விவாதங்கள் மற்றும் கலந்தாய்வு அமர்வுகள் இம்மாநாட்டில் நடத்தப்பட உள்ளன.


கல்வித்துறை, அரசு மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த சிறந்த பேச்சாளர்கள் மேற்கண்ட தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள். இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய்குமார் சூத் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எல்லைகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளார்.


தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாநில மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவனங்களின் துணைவேந்தர்களை ஒருங்கிணைத்து பணியாற்றுவதையும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதையும் உயர் கல்விக்கான புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதில் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!

news

பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!

news

எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?

news

100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

news

ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!

news

Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்