Happy Pongal மக்களே.. ஜனவரி 3 முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம்!

Dec 31, 2024,08:43 PM IST

சென்னை: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு டோக்கன் வரும் ஜன3ம் தேதி முதல் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 


2025ம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14ம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.இந்த பொங்கள் பண்டிகையை முன்னிட்டு  அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.




மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் ஜனவரி 3ம் தேதி முதல் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தொகுப்பு பெறும் நாள்,நேரம் குறிப்பிட்டு வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் டோக்கனில் குறிப்பிட்ட நாளில் சென்று சம்பந்தப்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்கவே இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீதி கேட்பதை தடுக்கும்.. திமுக அரசிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.. டாக்டர் தமிழிசை

news

மதுரையில்.. கண்ணகி போல கையில் சிலம்பு ஏந்தி.. போராடிய குஷ்பு.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்‌!

news

12 வருட போராட்டத்திற்குப் பிறகு.. திரைக்கு வரும் மதகஜராஜா.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

news

தமிழ்நாட்டில் சாலைகளை மேம்படுத்த ரூ. 87 கோடி நிதி.. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு

news

டாக்டர் அன்புமணி ராமதாஸ்.. பனையூரில் ஆதரவாளர்களுடன்.. 3வது நாளாக தீவிர ஆலோசனை

news

வீட்ல யாருமே இல்லை.. எதுக்கு ரெய்டுன்னும் தெரியலை.. ED சோதனை குறித்து அமைச்சர் துரைமுருகன்

news

அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.58,000த்தை கடந்தது

news

கோவையில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.. பதட்டம்.. அருகாமை பள்ளிகளுக்கு விடுமுறை

news

சுவிட்சர்லாந்தில் முகத்தை மறைக்கும் புர்கா அணிய தடை.. புத்தாண்டிலிருந்து அமலுக்கு வந்த சட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்