உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது.. 50 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு.. பெரும் எதிர்பார்ப்பு

Jan 07, 2024,10:29 AM IST

சென்னை: சென்னையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இன்று காலை நந்தம்பாக்கம் வர்த்தக மைய அரங்கில் கோலாகலமாக தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




50க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். 30,000க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். ஒரு டிரில்லியன் கனவுகள், டைட்டன்ஸ் ஆப் தமிழ்நாடு ஆகிய இலக்குகளுடன் இந்த மாநாட்டை தமிழ்நாடு பெரும் ஆர்வத்தோடு எதிர்நோக்கி உள்ளது.


170க்கும் மேற்பட்ட வர்த்தகப் பிரதிநிதிகளின் உரை மாநாட்டில் இடம் பெறவுள்ளது. 450க்கும் மேற்பட்ட முக்கிய தொழிலதிபர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர் . பல்வேறு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாகவுள்ளன.


இந்தியா, அமெரிக்கா,  இங்கிலாந்து, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள் இங்கு அரங்கம் அமைத்துள்ளன. மாநாட்டு வளாத்தில் சிறுதொழில் முனைவோருக்கான அரங்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் அரங்கம், பல்வேறு நாடுகளின் அரங்கங்கள், ஸ்டார்ட்அப் தமிழ்நாடு அரங்கம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.


தமிழ்நாட்டில் நிலவும் தொழில் சூழல், தொழில் தொடங்குவதற்கான உகந்த கட்டமைப்புகள் உள்ளிட்டவை குறித்தும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு எடுத்துக்காட்டப்படவுள்ளது.


இந்த மாநாட்டின் மூலமாக தமிழ்நாட்டுக்கு பெரிய அளவிலான முதலீடுகள் வந்து சேரும் என்ற எதிர்பார்ப்பில் தமிழ்நாடு அரசு உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்