சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே இன்றும் நிலவியது. ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது பொதுவாக இன்று இயல்பை ஒட்டி இருந்தது. வட தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 39 செல்சியஸ் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகள் தென்தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதியில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33 முதல் 37 செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மலைப்பகுதிகளில் 19 முதல் 29 செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக இன்று ஈரோட்டில் 39.4 செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சேலத்தை பொருத்தவரை வெப்பநிலை 38.6 செல்சியஸ் ஆக இருந்தது. சென்னை மீனம்பாக்கத்தில் 35.4 செல்சியஸ் வெப்பநிலையும், நுங்கம்பாக்கத்தில் 34.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
மன்னார் வளைகுடாவில் கீழடுக்கு சுழற்சி
மன்னார் வளைகுடா பகுதியில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தென் தமிழகம் வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
நாளை தென் தமிழகத்தில் ஒரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை எதிர்பார்க்கலாம். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும். 17ஆம் தேதியை பொருத்தவரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
வெப்ப நிலை உயரும்
18 மற்றும் 19 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த ஐந்து நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையானது தமிழகத்தில் படிப்படியாக இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டி வெப்ப நிலை பதிவாகும். அடுத்த 48 மணி நேரத்தைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும் வெப்பநிலை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவிக்கின்றது.
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!
IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?
A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு
Most Expensive player in IPL history.. ரூ. 27 கோடிக்கு ரிஷப் பந்த்தை அள்ளிய LSG.. ஏலத்தில் அதிரடி!
அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
{{comments.comment}}