இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர் அட்டூழியம்.. கொலைவெறித் தாக்குதல்.. தமிழக மீனவர்கள் வேதனை!

Dec 21, 2024,05:58 PM IST

நாகப்பட்டனம்: இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது கடுமையாக தாக்கியதால் நமது மீனவர்கல் படுகாயம் அடைந்தனர்.


வேதாரண்யம் கோடியக்கரைக்கு  அருகே உள்ள அக்கரப்பட்டியை சேர்ந்த விஜயகுமாருக்கு சொந்தமான பைபர் படகில் ராஜேந்திரன், ராஜ்குமார், நாகலிங்கம், ஆகியோர் நேற்று மதியம் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது கோடியக்கரை தென்கிழக்கே மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிரே  இரண்டு பைபர் படகுகளில் வந்த  6 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மூவரையும் வழிமறித்து கத்தி மற்றும் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். 




பிறகு பைபர் படகில் இருந்த வலை, மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை இலங்கை  கொள்ளையர்கள் எடுத்து சென்று  ஓடிவிட்டனர். இவர்கள் கொள்ளையடித்துச் சென்ற பொருட்கள் மூன்று லட்சம் மதிப்பு உடையவை என்று மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். 


இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன், ராஜ்குமார், நாகலிங்கம் ஆகிய  மூன்று மீனவர்களும் கடற்கரைக்கு வந்தனர்.  சக மீனவர்கள் அவர்களை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


அதேபோல, பெருமாள் பேட்டையை சேர்ந்த குமார்  என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் குமார் மற்றும் ஜெகன் லட்சுமணன் ஆகிய மூன்று பேரும் அதே பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது இவர்களையும் தாக்கி இலங்கை கடற் கொள்ளையர்கள் இவர்களுக்கு சொந்தமான ஒரு லட்சம் மதிப்புள்ள வலை, மீன்பிடி சாதனங்கள், செல்போன் உள்ளிட்ட உபகரணங்களை கொள்ளையடித்து சென்றனர்.


வேதாரண்யம் மீனவர்களிடம் அடுத்தடுத்து இலங்கை கொள்ளையர்கள் தாக்கி கொள்ளையடித்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!

news

சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்

news

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!

news

வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

news

இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!

news

மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

news

மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்