இலங்கை படகு மோதி தமிழ்நாட்டு மீனவர் பலி.. தூதரை நேரில் அழைத்து கண்டித்த மத்திய அரசு!

Aug 01, 2024,05:04 PM IST

டெல்லி: இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்தது தொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கை பொறுப்பு தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.


ராமேஸ்வரத்தில் இருந்து 400 விசைப்படகுகளில் 2000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தமிழக மீனவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர்  ரோந்து வந்துள்ளனர். இலங்கை கடற்படையினரை கண்டதும் தமிழக மீனவர்கள் விசைபடகுகளை கரைக்கு வேகமாக திருப்பியுள்ளனர். அப்போது  மீனவர்களின் விசைப்படகுகளை  இலங்கை கடற்படையினர் விடாது துரத்தி வந்துள்ளனர்.




இதில், கார்த்திகேயன் என்பவரது படகு மீது இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு மோதியதில், கார்த்திகேயனின் படகு முழுவதும் நடுக்கடலில் மூழ்கியது.  கார்த்திகேயன் படகில் சென்ற 4 பேரில். மலைச்சாமி என்பவர் கடலில் மூழ்கி இறந்துள்ளார். முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாயமான ராமச்சந்திரனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறலால், தமிழக மீனவர்கள் உயிரிழந்து இருப்பதாக மத்திய அரசு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியை நேரில் அழைத்து மத்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், உயிர் இழந்த மீனவர் மற்றும் காயம் அடைந்து காங்கேசன் துறையில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யவும் அறிவுறுத்தல் செய்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்