தமிழ்நாடு இறுதி வாக்காளர் பட்டியல்.. அதிக, குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி எவை தெரியுமா?

Jan 06, 2025,05:11 PM IST

சென்னை : 2025ம் ஆண்டிற்கான தமிழக இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில் அதிக மற்றும் குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதிகளின் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.


ஆண்டுதோறும் வாக்காளர்கள் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு, புதிய பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், இட மாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்கள் 2024ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி துவங்கி, நவம்பர் 28ம் தேதி வரை நடைபெற்றன. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் புதிய இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அந்த பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


இன்று வெளியிடப்பட்டுள்ள புதிய வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில் ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள் 6,36,12,950 என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 3,11,74,027 பேர் ஆண்கள், 3,24,29,803 பேர் பெண்கள், 9120 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புதிய வாக்காளர்கள் பட்டியலின் படி அதிக மற்றும் குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதிகள் குறித்த விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.


அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி :




செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதி தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 6,90,958 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 3,45,184. பெண் வாக்காளர்கள் 3,45,645 பேர் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 129 பேர் உள்ளனர்.


குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதி :


அதே போன்று தமிழகத்தில் குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டசபை தொகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1,76,505 தான். இவர்களில் ஆண்கள் 86,456, பெண்கள் 90,045, மூன்றாம் பாலினத்தவர்கள் 4 பேர் என குறிப்பிடப்ப்பட்டுள்ளது. 


குறைவான வாக்காளர்கள் கொண்ட தொகுதிகள் பட்டியலில் கீழ்வேளூருக்கு அடுத்த படியாக இரண்டாம் இடத்தில் இருக்கும் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுகம் சட்டசபை தொகுதியாகும். இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,78,980. இவர்களில் ஆண்கள் 92,615, பெண்கள் 86,296, மூன்றாம் பாலினத்தவர்கள் 69 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டம்  சென்னைதான். இங்கு 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 வாக்காளர்கள் உள்ளனர். 2வது இடம் திருவள்ளூருக்குப் போகிறது. அங்கு 35 லட்சத்து31 ஆயிரத்து 45 வாக்காளர்கள் உள்ளனர். கோவை மாவட்டத்தில் 31 லட்சத்து 85 ஆயிரத்து 594 வாக்காளர்கள் உள்ளனர். 4வது இடத்தில் சேலம் மாவட்டம் உள்ளது. இங்கு 29 லட்சத்து 99 ஆயிரத்து 953 வாக்காளர்கள் உள்ளனர். 5வது இடத்தில் வரும் மதுரை மாவட்டத்தில் 27 லட்சத்து 29 ஆயிரத்து 671 வாக்காளர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்