டோக்கியோ பாணியில்.. தமிழ்நாட்டு நகரங்களில் ஹெல்த் வாக் சாலை.. நவம்பர் 4 முதல்!

Oct 22, 2023,03:51 PM IST

சென்னை:  டோக்கியோவில் உள்ளது போன்ற ஹெல்த் வாக் சாலைத் திட்டம் தமிழ்நாட்டுக்கும் வருகிறது. நவம்பர் 4ம் தேதி இந்த சாலைகள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தொடங்கி வைக்கப்படுகிறது.


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஹெல்த் வாக் டிராக் என்ற சாலை உள்ளது. அதாவது எட்டு கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. இது முழுக்க முழுக்க நடைப் பயிற்சி செய்வோருக்கான சாலையாகும். இங்கு யார் வேண்டுமானாலும் நடைப் பயிற்சி செய்யலாம்.


எட்டு கிலோமீட்டர் என்பது 10,000 அடிகளுக்குச் சமம். இந்த அளவுக்கு ஒருவர் ஒரு நாளைக்கு நடந்தால் உடல் நலம் சரியாக இருக்கும் என்பதால் இந்த எட்டு கிலோமீட்டர் டிராக் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் பிரபலமான ஹெல்த் டிராக் ஆகும்.




தற்போது இதே பாணியில் தமிழ்நாட்டிலும் ஹெல்த் வாக் சாலைகள் அமைக்கப்படவுள்ளன. மதுரையில் முதல் ஹெல்த் வாக் சாலை அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். இந்த டிராக்கானது, ரேஸ் கோர்ஸ் சாலை முதல் ஆத்திகுளம் சந்திப்பு வரை அமைக்கப்படுகிறது.


தற்போது இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் அமல்படுத்தவுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஹெல்த் வாக் டிராக்கை நவம்பர் 4ம் தேதி தொடங்கி வைக்கிறார். சென்னையைப் பொறுத்தவரை முத்துலட்சுமி ரெட்டி பூங்கா  முதல் பெசன்ட் நகர் சர்ச் வழியாக சென்று மீண்டும் முத்துலட்சுமி ரெட்டி பார்க்கில் வந்து முடிவடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


இதேபோல ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் முக்கியமான சாலைகளில் இந்த ஹெல்த் வாக் டிராக்குகள் அமைக்கப்படுகின்றன. இந்த சாலைகளின் இரு புறமும் மரங்கள் நடப்படும். உடல் நலம் குறித்த விளக்க போர்டுகள் வைக்கப்படும். ஆங்காங்கே அமர்ந்து செல்ல இருக்கைகளும் அமைக்கப்படும். இந்த சாலைகளில் மாதம் ஒருமுறை வாக்கத்தான் போட்டிகளும் நடத்தப்படும். மக்களிடையே நடைப் பயிற்சி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இந்த டிராக்குகள் உதவும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


அமைச்சர் மா.சுப்பிரமணியன் தினசரி தவறாமல் நடைப் பயிற்சி மேற்கொள்ளக் கூடியவர். அவர் எங்கிருந்தாலும் அங்கு வாக்கிங் போய் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அது மழை பெய்தாலும் சரி, மலைப் பகுதியாக இருந்தாலும் சரி, வெளிநாடாக இருந்தாலும் சரி, வெளி மாநிலமாக இருந்தாலும் சரி நடக்காமல் விட மாட்டார் மா.சுப்பிரமணியன். அந்தளவுக்கு உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். தற்போது அவரது முயற்சியால் தமிழ்நாடு முழுவதும் நடைப் பயிற்சி மேற்கொள்வோருக்காக சிறப்பு டிராக் வருவது குறிப்பிடத்தக்கது.


மக்களே இதைப் பயன்படுத்திக்கங்க.. தினசரி நடங்க.. நல்லாருங்க!

சமீபத்திய செய்திகள்

news

வடக்கு அந்தமான் அருகே.. புதிய காற்றழுத்தம்.. நாளை உருவாகும் என்று வானிலை மையம் தகவல்

news

சக்ஸஸ்.. மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது வழித்தடத்தில்.. சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது!

news

வளைகாப்பு நடத்துவது எப்படி? வேலூர் காங்கேயநல்லூர் அரசுப் பள்ளி மாணவிகளின் ரீல்ஸ்..டீச்சர் சஸ்பெண்ட்!

news

Su Venkatesan Vs Vanathi Srinivasan.. உங்களுக்கு ஒவ்வாமையா.. முதல்ல பன் பட்டருக்கு வழி சொல்லுங்க!

news

ஐபோன் 16 விற்பனை தொடக்கம்.. நீண்ட க்யூவில் நின்று போட்டி போட்டு வாங்கிச் சென்ற ஐ போன் பிரியர்கள்!

news

திருப்பதி லட்டில் கொழுப்பா... குடும்பத்தோடு சத்தியம் செய்ய நாயுடு ரெடியா? .. ஜெகன் கட்சி சவால்!

news

உளவியல் சிகிச்சைக்கு மருந்து மாத்திரைகளுடன்.. உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்.. வைரமுத்து

news

என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீங்கன்னு சொன்னேன்ல.. செய்தியார்களிடம் சீறிய ரஜினிகாந்த்!

news

மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.55,000த்தை கடந்தது!

அதிகம் பார்க்கும் செய்திகள்