பிப். 12.. தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்.. ஆளுநர் உரையுடன்.. பரபரப்பு எதிர்பார்ப்பு!

Feb 01, 2024,09:04 PM IST

சென்னை:  தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.


சட்டப்பேரவையில் பிப்ரவரி 19ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.


மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்துள்ள நிலையில், பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதில்  என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.. எதற்கெல்லாம் நிதி ஒதுக்க இயலும்..புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகுமா.. போன்றவை குறித்து தமிழக பட்ஜெட்டில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. 




தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்நிலையில்  தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக, சபாநாயகர் அப்பாவு  செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகையில், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கும். 


இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 19ஆம் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசு  பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பிப்ரவரி 20ஆம் தேதி 2024 - 25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்  தாக்கல்  செய்யப்படுகிறது.  21ஆம் தேதி 2023- 24 ஆண்டுக்கான முன்பண செலவு மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். இந்த சட்டப்பேரவை நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகளை நேரலையில் முழுமையாக காண்பிக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.


கடந்த ஆண்டு ஆளுநர் உரையின்போது, உரையில் சில பகுதிகளை திருத்தியும், சில பகுதிகளைப் படிக்காமலும் விட்டார் ஆளுநர் ஆர். என். ரவி. இது சர்ச்சையைக் கிளப்பியது. இதுதொடர்பாக உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக் காட்டி அறிக்கை வாசிக்கவே, கோபமடைந்த ஆளுநர் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த முறை சுமூகமான கூட்டமாக இது இருக்குமா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்