தமிழ்நாடு பட்ஜெட் 2024-25: சட்டசபையில் தாக்கல் செய்தார்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

Feb 19, 2024,10:05 AM IST

சென்னை:  தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.


நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். 


லோக்சபா தேர்தல் வரும் நிலையில் தமிழநாடு அரசின் பட்ஜெட்டுக்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்று தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் தொடர்பான முத்திரைச் சின்னம் நேற்று வெளியிடப்பட்டது. 




அதைத் தொடர்ந்து, என்னென்ன தலைப்புகளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. அதன்படி, சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும்  ஆகிய அம்சங்களில் மாபெரும் 7 தமிழ்கனவுகள் இடம்பெறுகிறது என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், நாளை வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்வார்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் 4வது பட்ஜெட் இது. முதல் 3 பட்ஜெட்டுகளை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!

news

தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவு தினம்.. மதுரையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்!

news

கந்த சஷ்டி விரதம் 2024 : கோவிலுக்குப் போகாமல்.. வீட்டிலேயே எளிமையாக விரதம் இருக்கும் முறை

news

கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

news

கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!

news

மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!

news

35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி

news

வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

news

சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்