சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் அதிமுக பாஜக இடையிலான கூட்டணி பெரும் சிதிலமடைந்துள்ளது. பாஜக சொன்னதையெல்லாம் தட்டாமல் கேட்டு வந்த அதிமுக சமீப காலமாக கடும் கொதிப்புடன் காணப்பட்டது. காரணம், மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சும், செயல்பாடும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மறைந்த திமுக தலைவர் பேரறிஞர் அண்ணா ஆகியோர் குறித்து அண்ணாமலை குறித்து பேசிய கருத்துக்கள் அதிமுகவினரை கொதிப்படைய வைத்து விட்டது.
இந்த நிலையில் அதிரடியாக தனது நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டிய அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக கூறி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இதை பாஜக தரப்பு எதிர்பார்க்கவில்லை. அதை விட முக்கியமாக, எடுத்த முடிவிலிருந்து அதிமுக பல்டி அடிக்கும் என்று அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால் அதிமுகவோ எடுத்த முடிவு உறுதியானது, இறுதியானது என்று கூறி மேலும் அதிர்ச்சியைக் கூட்டியது.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கட்சி மேலிடம் டெல்லிக்கு அழைத்தது. அவரும் கிளம்பிச் சென்றார். டெல்லி சென்ற அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அதிமுக விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கட்சித் தலைமைக்கு நிர்மலா சீதாராமன் அறிக்கை கொடுத்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அண்ணாமலை அவரை சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவுடன் ஒத்துப் போகுமாறும், இறங்கிப் போகுமாறும், அடக்கி வாசிக்குமாறும் அண்ணாமலை அறிவுறுத்தப்படுவாரா அல்லது தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}