"ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு".. சட்டசபையில் தனித் தீர்மானம்.. 10 மசோதாக்களும் மீண்டும் தாக்கல்

Nov 18, 2023,05:47 PM IST

சென்னை: சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளை திருப்பி அனுப்பிய செயல் தவறான செயல், ஏற்புடையதல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


தமிழ்நாடு சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட 10 சட்ட முன்வடிவுகளை ஆளுநர் ஆர். என். ரவி சமீபத்தில் மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதையடுத்து மீண்டும் அதே சட்ட முன்வடிவுகளை சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றி மறுபடியும் ஆளுநருக்கே திருப்பி அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.


அதற்காக, சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. சபை கூடியதும் சபாநாயகர்  அப்பாவு இரங்கல் குறிப்புகளை வாசித்தார். மறைந்த ஆன்மீகவாதி பங்காரு அடிகளார் மற்றும் மூத்த அரசியல் தலைவர் சங்கரய்யாவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதேபோல மறைந்த உறுப்பினர்கள் குறித்தும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து சட்டசபையில் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். 




அதன் பின்னர் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதன் பின்னர் உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தின் மீது பேசினர். 


இன்றைய சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாக்கள் விவரம்:


தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக உருவாக்கம் தொடர்பான மசோதா

அண்ணா பல்கலைக்கழ சட்டத் திருத்த மசோதா

சென்னை பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

தமிழ்நாடு மீன்வள  பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக  மசோதா

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்