"முதலில் தேசிய கீதத்தை இசைக்கவில்லை"..  உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர்!

Feb 12, 2024,06:20 PM IST

சென்னை: சட்டசபைக் கூட்டத்தின் தொடக்கத்திலேயே தேசிய கீதத்தை இசைக்கவில்லை என்று கூறி ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல், தொடக்க உரை மட்டும் நிகழ்த்தி விட்டு உரையை படிக்காமல் புறக்கணித்து விட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.


தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர். என். ரவியின் உரையுடன் கூட்டம் தொடங்கியது.




சட்டசபைக்கு ஆளுநர் வந்தபோது அவருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சட்டசபைக்கு வந்தார் ஆளுநர் ஆர். என். ரவி. அதைத் தொடர்ந்து வழக்கம் போல, தமிழ்த் தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. இதையடுத்து ஆளுநர் ஆர். என். ரவி பேசத் தொடங்கினார்.


சபாநாயகர் அப்பாவு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உறுப்பினர்களை தமிழில் வாழ்த்தி தனது உரையைத் தொடங்கினார் ஆளுநர் ஆர். என். ரவி. திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி பேச ஆரம்பித்த அவர் அதன் பின்னர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், கூட்டத் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும், தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து கோரி வருகிறேன். அது தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்று கூறி தனது உரையை இத்துடன் நிறுத்திக் கொள்வதாக ஆளுநர் அறிவித்தார். அதன் பின்னர் அவர் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.


தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரையை இதுவரை எந்த ஆளுநரும் படிக்காமல் புறக்கணித்த நிகழ்வு நடைபெற்றதில்லை என்பதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் ஆளுநர் படிக்க வேண்டிய உரையை, பின்னர் சபாநாயகர் அப்பாவு முழுமையாக வாசித்தார். ஆளுநர் சட்டசபையில் அமர்ந்திருந்து இந்த உரையைக் கேட்டார்.


கடந்த ஆண்டும் ஆளுநர் உரையின்போது சர்ச்சை ஏற்பட்டது.  உரையில் சிலவற்றை படிக்காமல் ஸ்கிப் செய்தார் ஆளுநர். இதையடுத்து அரசு சார்பில் ஒரு கண்டனத் தீர்மானம் உடனடியாக கொண்டு வரப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் சபையில் தேசிய கீதம் வாசிக்கும் முன்பாகவே கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்து வெளியேறினார். அதுவும் தமிழ்நாடு சட்டசபை அதுவரை கண்டிராத நிகழ்வாகும். இந்த ஆண்டு ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்துள்ளார் ஆளுநர் ஆர். என்.ரவி.


சமீபத்தில் கேரள சட்டசபையில் அந்த மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் இதுபோலத்தான் ஆளுநர் உரையை வாசிக்காமல் 2 நிமிடத்திலேயே முடித்து விட்டு வெளியேறினார் என்பது நினைவிருக்கலாம்.


தேசிய கீதத்திற்கு முன்பே ஆளுநர் வெளிநடப்பு




சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை முழுமையாக தொடர்ந்து படித்து முடித்தார். அதன் பின்னர் அவர் பேசுகையில், ஆளுநர் உரையை குறைவாக படித்திருக்கிறார் ஆளுநர், அதைக் குறையாக சொல்லவில்லை. ஆனால் ஆளுநர் உரையை புறக்கணித்தது மரபுப்படி சரியல்ல என்று கூறினார் சபாாயகர். மேலும் தேசிய கீதத்தை எப்போது பாட வேண்டும் என்பது குறித்து கடந்த ஆண்டே ஆளுநருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது என்றும் சபாநாயகர் விளக்கினார்.


இதையடுத்து ஆளுநர் உரையைப் புறக்கணித்த ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் வாசித்தார். அவர் வாசிக்கத் தொடங்கியதும், ஆளுநர் ஆர். என். ரவி. எழுந்து வெளியேறி விட்டார். தேசிய கீதம் இசைக்கப்படாத நிலையில் ஆளுநர் வெளியேறி விட்டார். கடந்த ஆண்டும் இதுபோலவே ஆளுநர் ஆர். என். ரவி வெளிநடப்புச் செய்தார் என்பது நினைவிருக்கலாம்.


ஆளுநர் வெளிநடப்புச் செய்த பிறகு, ஆளுநர் உரையில் அரசு தயாரித்து அளித்த உரை மட்டுமே இடம் பெறும், சபையில் பேசப்பட்ட பிற கருத்துக்கள் இடம்பெறாது என்றும் அப்பாவு அறிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்