விக்கிரவாண்டி தொகுதி காலியானது.. சட்டசபை செயலகம் அறிவிப்பு.. 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல்

Apr 08, 2024,05:37 PM IST

சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமான நிலையில், அத்தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து அத்தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் திமுக உறுப்பினராக இருந்தவர் ராதாமணி. இவர் அப்பதவியில் இருக்கும் போதே உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டு தோல்வியுற்றார். அதே விக்கிரபாண்டி தொகுதியில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் புகழேந்தியே மீண்டும் போட்டியிட்டார். இம்முறை வெற்றி பெற்றார்.  விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்தார் புகழேந்தி.




வந்த நிலையில்,சமீபத்தில் புகழேந்தி உடல்நிலை குறைவு காரணமாக காலமானார்.  இதையடுத்து அந்தத் தொகுதி காலியாக உள்ளதாக சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது. இதனால் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுவாக பதவியில் இருக்கும் ஒருவர் மறைந்தாலோ அல்லது  அவர் வகித்திருக்கும் பதவியை ராஜினாமா செய்தாலோ அந்தத் தொகுதியில், ஆறு மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது சட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில் இதேபோல விளவங்கோடு சட்டசபைத் தொகுதி உறுப்பினராக இருந்த விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்தத் தொகுதிக்கு தற்போது மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் பொதுத் தேர்தல் அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டதால் விக்கிரவாண்டிக்கு இப்போது தேர்தல் நடத்தப்பட மாட்டாது.  பொதுத் தேர்தல் முடிந்த பிறகுதான் அங்கு இடைத் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்