யுஜிசியின் விதிமுறைகள் மாற்றம்.. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.. சட்டசபையில் தீர்மானம்

Jan 09, 2025,07:20 PM IST

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டுள்ள நிலையில், இந்த யுஜிசி விதிகளுக்கு எதிராக முதல்வர் மு க ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் இன்று தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.


பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் நியமனம்  தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. அதன்படி பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன தேர்வுக் குழு குறித்து  ஆளுநரே முடிவு செய்வார் என்பது உள்பட பல்வேறு புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.  இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பல்வேறு கட்சிகளும் இதை கடுமையாக எதிர்த்துள்ளன.


இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகளுக்கு எதிராகத் தமிழக சட்டசபைக் கூட்டத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின்  தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு ஆளும் திமுக கூட்டணி, அதிமுக, பாமக உள்பட சபையில் இருந்த அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்கவே தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அதேசமயம், இந்தத் தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தது.


முன்னதாக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:




யுஜிசியின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது.பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப்பெற வேண்டுமென இப்பேரவை கருதுகிறது.


பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது மட்டுமல்ல. தமிழ்நாட்டின் உயர் கல்வி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.


இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள், 2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள், 2025 ஆகியன தேசிய கல்விக் கொள்கை, 2020-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டில் சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வலுவான உயர் கல்விக் கட்டமைப்பை இந்த வரைவு நெறிமுறைகள் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாலும், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதாலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த இரண்டு வரைவு நெறிமுறைகளையும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு நெறிமுறைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசின் கல்வித் துறையை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பழம்பெரும் பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் காலமானார்.. கம்பீரக் குரலுக்குச் சொந்தக்காரர்!

news

யுஜிசியின் விதிமுறைகள் மாற்றம்.. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.. சட்டசபையில் தீர்மானம்

news

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பெருகும்.. குறையாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

news

பொங்கல் தொகுப்பு.. சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு க ஸ்டாலின்.. ஜன 13 வரை வாங்கலாம்

news

திருப்பதியில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் வரலாறு காணாதது.. கைது செய்ய வேண்டும்.. ரோஜா ஆவேசம்

news

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்... எனவே.. நாளை ரேஷன் கடைகள் இயங்கும் மக்களே!

news

த.வெ.க. புதிய மாவட்ட நிர்வாகிகள் தயார்.. நாளை முதல் கூட்டம்.. யார் யாருக்கு பொறுப்பு?

news

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: சந்திரபாபு நாயுடு

news

வணங்கான் படத்தில் நடித்த பிறகுதான்.. என் மீது வெளிச்சமே விழுந்தது.. நாயகி ரோஷினி ஓபன் டாக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்