சென்னை: நெல் சாகுபடி பரப்பினை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய ரூபாய் 160 கோடியில் நெல் சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். சிறுதானிய இயக்கத்திற்காக ரூபாய் 52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகள் இன்று தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.
2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார் இதில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகின. இதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்பாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறியதாவது:
உழவர்களின் வாழ்வில் இந்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும். 55 ஆயிரம் உழவர்கள் வேளாண் இயந்திரங்கள் கருவிகள் நான்கு ஆண்டுகளில் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன. 510 கோடிகளில் விவசாயிகளின் இயந்திர தேவைகள் தீர்க்கப்பட்டுள்ளன. 172 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 435 இளைஞர்களுக்கு வேளாண் தொழில் தொடங்க தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. 1511 ஆழ்துளை மற்றும் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
15,700 ஆதிதிராவிடர் பழங்குடியினர் உழவர்கள் பயன்பெற்றுள்ளனர். 510 கோடியில் விவசாயிகளின் இயந்திர தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் 147 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூபாய் 1452 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு இழப்பீடு தொகையாக ரூபாய் 5242 கோடி வழங்கப்பட்டுள்ளது.
2021-22 முதல் 2023-24 ஆம் ஆண்டு வரை 34.38 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி எட்டப்பட்டுள்ளன. கரும்பு விவசாயிகளுக்கு ரூபாய் 841 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது கரும்பு விவசாயிகளுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூபாய் 215 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 21. 31 லட்சம் உழவர்கள் பயன் பெற்றுள்ளனர். 40,000 மெட்ரிக் டன் பசுந்தாள் உரங்கள்,10 லட்சம் வேப்பம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. இயந்திரமாக்கல் திட்டத்தின் கீழ் 57 ஆயிரம் விவசாயிகளுக்கு 510 கோடி மதிப்பீட்டில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இயற்கை பேரிடரால் உற்பத்தி பாதிப்பிற்கு ஆளான உழவர்களை மீட்க ரூபாய் 1631.புள்ளி 53 கோடி, ஒதுக்கீடு செய்யப்பட்டு, 20.84 லட்சம் உழவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு இழப்புத் தொகை 30 லட்சம் உழவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் 3.58 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. 2019-20 ஆண்டுக்கான விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் கடன் அளவு ரூபாய் 1.83 இலட்சம் கோடியாக இருந்த நிலையில், 2023- 24 ஆம் ஆண்டு பயிர் கடன் அளவு 3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பயிர் கடன் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களால் 346 லட்சம் மெட்ரிக் தன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பாரம்பரிய முறைகளை பின்பற்றி வேளாண் துறை வளர்ந்து வருகிறது. இதுவரை ஐந்தாவது முறையாக வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயத்துடன் உழவர்கள் நலனையும் மேம்படுத்த வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்.
வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
மானாவாரி நிலங்களில் கோடை உழவுக்கு சிறப்பு திட்டம்:
டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம். இதற்காக விவசாயிகளுக்கு சிறப்பு தொகை ரூபாய் 102 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூபாய் 2000 மானியம் வழங்கப்படும். மூன்று லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்ய, வரும் ஆண்டில் மானியம் வழங்கப்படும். கோடை உலகம் மானியத்திற்காக ரூபாய் 24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க ரூபாய் 52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை உயர்த்தப்படும்.
கரும்புக்கான ஊக்கத்தொகை ரூபாய் 215 இல் இருந்து ரூபாய் 349 ஆக உயர்த்தப்படும்.
நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து ரூபாய், இரண்டு லட்சமாக உயர்த்தப்படும்.
விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 1.86 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பாசன நீர் மின் இணைப்புகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊரகங்களில் ரூபாய் 269 கோடியில் செயல்படுத்தப்படும்.
108 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. சிறுதானிய இயக்கத்தை செயல்படுத்த ரூபாய் 52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பாசன பகுதிகளை தூர் வாரியதால் பாசனப்பகுதி 96 லட்சம் ஹெக்டராக உயர்த்தப்படும்.
இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தை படுத்த அரசு கட்டிடங்களில் வசதி ஏற்படுத்தி தரப்படும். இயற்கை வேளாண் திட்டம் ரூபாய் 12 கோடியில் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
என்ணெய் வித்து பயிர் பரப்பினை அதிகரிக்க 7. 14 லட்சம் ஏக்கரில் 90 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 108 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்காச்சோளம் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டம் ரூபாய் 40 கோடியில் செயல்படுத்தப்படும்.
நெல் சாகுபடி பரப்பினை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய ரூபாய் 160 கோடியில் நெல் சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
சிறுதானிய இயக்கத்திற்காக ரூபாய் 52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தென்னை பயிர் செய்யப்படும் மாவட்டங்களில் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த ரூபாய் 4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்காக உழவரைத் தேடி வேளாண் திட்டம் செயல்படுத்தப்படும். உழவர்கள் கிராமங்களையே சாதித்து தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயத்தில் அதிக உற்பத்தி செய்யும் உழவர்களை கௌரவிக்கும் விதமாக, அவர்களுக்கு விருது வழங்க ரூபாய் 55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு மானிய தொகை 40 சதவீதத்லிருந்து 60% ஆக உயர்த்தப்படும்.
இயற்கை மரணத்துக்கான நிதி ரூபாய் 20 ஆயிரத்தில் இருந்து முப்பதாயிரம் ஆக உயர்த்தப்படும்.
63 ஆயிரம் உழவர்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 22 கோடியில் மலைவாழ் உழவர்கள் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் 20 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஆயிரம் முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். வேளாண்மை பட்டதாரிகளை கொண்டு உலக நல சேவை மையங்கள் செயல்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
3 லட்சம் ஏக்கரில் நுண்ணீர் பாசன வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 1.36 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்.
நெல் உற்பத்தியில் சாதனை படைத்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம், உள்ளிட்ட நாடுகளுக்கு விவசாயிகளை அழைத்துச் செல்ல ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மல்லிகை சாகுபடியை அதிகரிக்க ரூபாய் 1.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 3000 இயக்கங்களில் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும்.
ரூபாய் 15 கோடியில் ஏழு விதைத்த சுத்தகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். ரூபாய் 12 கோடியில் பருத்தி சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும். ரூபாய் 841 கோடியில் பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். ரூபாய் 125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் செயல்படுத்தப்படும்.
பயிர் வகை விதைத்தொகுப்பு ஒரு லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். அதேபோல் 75% மாநிலத்தில் ஒன்பது லட்சம் குடும்பங்களுக்கு பழச் செடி தொகுப்பும் வழங்கப்படும்.
தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை விரைவில் வெளியிடப்படும். புரதச்சத்து நிறைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க ஐந்து காளான் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.
காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த ரூபாய் 10.5 கோடியில் கோடைகால பயிர் திட்டம் செயல்படுத்தப்படும். பாரம்பரிய காய்கறிகளை சாகுபடி செய்ய ரூபாய் 2.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
உழவர்களின் நிலங்களில் விதைப் பண்ணைகள் அமைக்க ரூபாய் 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!
Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?
மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?
Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!
தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!
அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!
Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?
கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!
{{comments.comment}}