சென்னை: கன்னியாகுமரியில் முல்லை தோட்டம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூபாய் 170 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் 32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில், இன்று வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வெளியிட்ட அறிவிப்புகள்:
2021 இல் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ் சமூகம் உழவர்களை உச்சத்தில் வைத்துள்ளது. உழவர்கள் வாழ்வு வளம் பெற வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண் நிதிநிலை அறிக்கை உலக வாழ்க்கையை மேலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும். உழவர் பெருமக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணில் காப்போம் திட்டத்திற்கு ரூ. 206 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 2022- 2023 உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. வேளாண்நிலைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைத்திட அரசு பல்வேறு சிறிய முயற்சிகளை எடுத்துள்ளது. கடந்த ஆண்டில் 45 லட்சம் பெற்று தண்ணீர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கரும்புக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 195 வீதம் ரூபாய் 260 கோடி வழங்கப்பட்டுள்ளது.
10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப் படுக்கைகள் வழங்கிட ரூபாய் 6 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்படும். பயிர் உற்பத்தி திறன் உயர்த்துதல் ஊக்குவிப்பு திட்டம் திட்டத்திற்கு ரூபாய் 48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருமழை போன்ற இயற்கை பேரிடர்களால் பயிருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு 2.74 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 208.20 கோடி நிவாரணம் விரைவில் வழங்கப்படும்.
1564 பண்ணை குட்டைகளும் அமைக்கப்பட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 473 குளங்கள் ஊரணிகள் தூர்வாறப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையாக அரசு பொறுப்பேற்றுள்ளது. 2482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூபாய் 6.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு உயிர்ம வேளாண்மைக்காக மாதிரி பண்ணை உருவாக்க ரூ. 38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு லட்சம் விவசாயிகள் பயனடைய 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட ரூபாய் 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பத்தாயிரம் விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உர படுக்கைகள் வழங்கிட ரூபாய் ஆறு கோடி மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நிரந்தர மண்புழு உரத் தொட்டிகள் உரப்படுக்கை அமைக்க ரூபாய் 5 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்படும்.
தலா 37 ஆயிரத்து 500 ஏக்கர் களர்அமில நிலங்களை சீர்படுத்த ரூபாய் 22.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பயிர் உற்பத்தித் திறன் உயர்த்துதல் ஊக்குவிப்பு திட்டத்திற்கு ரூபாய் 48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மண் வளத்தை காக்க ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து மண்வளம் காக்க 6.27 கோடி நிதி வீதி ஒதுக்கீடு செய்யப்படும்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சீரகசம்பா விதைகள்
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வல்ல சீரகசம்பா விதைகள் விநியோகிக்கப்படும். சீரகசம்பா போன்ற மருத்துவம் குணம் கொண்ட பாரம்பரிய நெல் ரகங்கள் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திட விதை வழங்கப்படும். 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரக விதைகள் உற்பத்தி செய்யப்படும். பத்தாயிரம் ஏக்கர் சாகுபடி மேற்கொள்ள விதை விநியோகம் செய்திட 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள் வழங்கிட 7.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் 10 லட்சம் ஏக்கர் பயிர்களில் திரவ உயிர் உரம் இட 5 லட்சம் லிட்டர் திரவ உயிர் உரம் வழங்கப்படும். திரவ உயிர் உரம் இடுவதால் தழை, மணி, சாம்பல், துத்தநாக சத்து எளிதில் அளித்து பத்து முதல் 20% வரை கூடுதல் வருவாய் கிடைக்கும்.
ஆடாதொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்க்க ரூபாய் 1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வட்டாரத்துக்கு ஒரு கிராமம் தேர்ந்தெடுத்து உரிம வேளாண்மைக்கான மாதிரி பண்ணை உருவாக்க ரூபாய் 38 லட்சம ஒதுக்கீடு செய்யப்படும். 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூபாய் 27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பாரம்பரிய நெல் ரக உற்பத்திக்கு
மரபு சார் நெல் ரகங்களை பாதுகாக்க 20 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்படும். 10000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். பத்தாயிரம் வேப்பம் கன்றுகள் வழங்கப்படும். வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் 10 லட்சம் வேப்பம் மரக்கன்றுகள் வழங்கப்படும்.
14000 ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்புகள் அமைக்க ரூபாய் 42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்திட ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
10,000 விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உர படுக்கைகள் வழங்க ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
உணவு மானியம்
உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் உணவு மானியத்துக்கு ரூபாய் 10 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மூலிகை பயிக சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க ரூபாய் 5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கண்வலிக்கிழங்கு, சென்னா, நித்திய கல்யாணி, மருந்துகூர்கன் பயிர்கள் 1680 ஏக்கரில் சாகுபடி செய்யப்படும்.
வேளாண் வட்டாரத்துக்கு ஒரு கிராமம் தேர்ந்தெடுத்து உயிர்ம வேளாண்மைக்கான மாதிரி பண்ணை உருவாக்க ரூபாய் 38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
துவரை சாகுபடி பரப்பு விரிவாக்க இயக்கம் செயல்படுத்த ரூபாய் 17.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் பட்டதாரிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் மானியம் வழங்கப்படும். வேளாண் தொழில் முனைவோர் ஆகும் வகையில் பட்டதாரிகளுக்கு ஒரு கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தோட்டக்கலை விற்பனை மையங்கள்
10 அரசு தோட்டக்கலை பண்ணைகளில் தோட்டக்கலை விற்பனை மையங்கள் ரூபாய் 1 கோடியில் அமைக்கப்படும்.
உதகை ரோஜா பூங்காவில் புதிய ரோஜா ரகங்களை அறிமுகம் செய்து பொதுமக்களை கவரும் வகையில் பூங்கா மேம்படுத்தப்படும்.
உயர் தொழில்நுட்ப நாற்றங்கால்கள் அமைக்க வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் ரூபாய் 13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
எண்ணெய் வித்துக்கள் பயிரிட
சிறுதானியங்கள் பயிறு வகைகள் எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூபாய் 36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பயிர் பெருக்கு திட்டத்திற்கு ரூபாய் 40.27 கோடி ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க பரவலாக ரூபாய் 1.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு அரசின் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கு ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
உயர் தொழில் நுட்ப நாற்றங்கால் உயர் தொழில்நுட்ப நாற்றங்கள் அமைக்க வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் ரூபாய் 13 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பயிர் காப்பீட்டு திட்டம்
விவசாயிகள் வருவாய் இழப்பிலிருந்து மீண்டு வர பயிர் காப்பீடு திட்டம் 1775 கோடியில் செயல்படுத்தப்படும்.
தோட்டக்கலை பண்ணைகளின் நீர் பாசனம் அமைக்கவும், செயல்விளக்கம் அளிக்கவும், ரூபாய் 27.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தானியங்கி மின்னணு நீர்ப்பாசன அமைப்புகள் அமைக்க 12 ஆயிரம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.
பருத்தி சாகுபடி ஊக்குவிப்பு திட்டத்தின் காரணமாக 2024 - 25 இல் பருத்தி உற்பத்தி 5.5 லட்சம் பேல்லாக அதிகரிக்கும். பலன் தரும் பருத்தி சாகுபடி திட்டத்திற்கு ரூபாய் 14.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
உழவர் அங்காடிகள்
100 உழவர் அங்காடிகள் மாநில நிதியில் செயல்பட ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 215 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூபாய் 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சர்க்கரை கட்டுமானம் தரக்கூடிய புதிய கரும்பு ரக விதைகள் வழங்கிட ரூபாய் 7.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை உயர்த்த ரூபாய் 12.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாடு திட்டம் அமைக்க ரூபாய் 3.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
விவசாயிகளுக்கு 7 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும். 36.15 கோடியில் ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.
முக்கனிக்கான மேம்பாட்டு சிறப்பு திட்டத்தில் மா உற்பத்தி அதிகரிக்க 27.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் ஏற்றுமதிக்கு உகந்த மாம்பழங்கள் உற்பத்திக்கு 250 ஏக்கரில் மாந்தோப்புகள் உருவாக்கப்படும். வாழை உற்பத்திக்கு 12.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதில் வாழைப்பரப்பு விரிவாக்கம், முட்டுக் கொடுத்தல் மேற்கொள்ள மானியம் வழங்கப்படும். புதிய ரக பலா சாகுபடிக்கு ஒரு ரூபாய் 1.14 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கன்னியாகுமரியில் முல்லை பூங்கா
கன்னியாகுமரி மாவட்டம் வேளி மலையில் முல்லை பூங்கா அமைக்க 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கன்னியாகுமரி சூரியத் தோட்டம், செங்கல்பட்டு செம்பருத்தி நடவு செடிகள் உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
தென்காசியில் நடுவங்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணை ஒரு கோடி நிதி ஒதுக்கீடில் அமைக்கப்படும்.
10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தோட்டக்கலை பண்ணை இயந்திர கண்காட்சி அமைக்கப்படும். தோட்டக்கலை துறை இயந்திரங்கள் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணை பூங்காக்கள் அமைக்க ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மரவள்ளியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்திட ரூபாய் ஒரு கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பேரிச்சம்பழம் சாகுபடியை ஊக்குவிக்க ரூபாய் 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
முந்திரி சாகுபடி பரப்பை அதிகரித்து உற்பத்தியை உயர்த்திட 3.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
200 பண்ணை குட்டைகள் அமைக்க 3.67 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தூத்துக்குடி, வேலூர், தர்மபுரி,கரூர், மாவட்டங்களில் 250 ஏக்கரில் பேரிச்சை சாகுபடி செய்ய ஏக்கருக்கு 12 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஆபத்து இல்லாமல் பயிர்களை காக்க சூரிய சக்தி மின் வேலிகள் அமைக்கப்படும். விவசாயிகளுக்கு 75000 மீட்டர் நீளத்திற்கு சூரிய சக்தி மின் வேலிகள் அமைத்திட ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பாரம்பரிய காய்கறி ரகங்களை சாகுபடி செய்யும் விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
வேளாண் இயந்திரம் வாங்க மானியம்
சிறு,குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூபாய் 170 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
10 மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடமாடும் உலர்த்திகள் வாங்க ரூபாய் 2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஈரோடு, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, மாவட்டங்களில் ஐந்து மஞ்சள் மெருகூட்டும், வேக வைக்கும் இயந்திரங்கள் வாங்க ரூபாய் 2.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை கணினி மயமாக்க ரூபாய் 141 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பொருளீட்டுக்கடன் வரம்பு ரூபாய் 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும்.
பெரம்பலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தர்மபுரி, திண்டுக்கல், விருதுநகர், ஆகிய ஏழு மாவட்டங்களில் இயற்கை வள மேம்பாட்டு பணிக்காக ரூபாய் 43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
வேளாண் கண்காட்சி
விவசாயிகள், பொதுமக்கள், பயன்பெறும் வகையில் ரூபாய் 9 கோடி செலவில் மூன்று இடங்களில் வேளாண் கண்காட்சிகள் நடத்தப்படும்.
சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா,அய்யம்பாளையம் நெட்டை தென்னை, உரிகம்புளி, புவனகிரி மிதிபாகற்காய்,செஞ்சோளம், நெல்லை, அவுரி, ஒட்டைப்பட்டி ,
விதையில்லா திராட்சை ,செங்காந்தள் விதை உள்ளிட்ட பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும். இதற்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக ரூபாய் 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
கூட்டுறவு பயிர் கடன்
2024 - 25 ரூபாய் 16,500 கோடி கூட்டுறவு பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆடு, கோழி ,மாடு,மீன், போன்றவை வளர்ப்பு நடைமுறை முதலீட்டு கடனுக்கான வட்டி மானியத்துக்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தஞ்சை, திருவாரூர், நாகை,மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய இடங்களில் வாய்க்கால்களை தூர்வார ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருங்கிணைந்த விதை சான்றளிப்பு மற்றும் உயரிய வளாகம் அமைக்கப்படும்.
ஏழு மாவட்டங்களில் இயற்கை வள மேம்பாட்டு பணிக்காக ரூபாய் 43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
விவசாயிகளுக்கு சிறந்த விலை கிடைக்க விளைபொருட்களை பண்ணை வழி வர்த்தகம் செய்ய ரூபாய் 60 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைத்தல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூபாய் இரண்டு புள்ளி 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
முல்லை பூங்கா
ஐவகை தமிழர் நிலத்திணைகளில் ஒன்றான காடும்,காடும் சார்ந்த இடத்தை சேர்ந்த முல்லை நிலத்தில் தமிழர்கள் வாழ்ந்தனர். தமிழ் மக்களின் வாழ்வியல் புவியியல் நிலைகளை எடுத்துக்காட்டும் விதமாக முல்லை பூங்கா அமைக்கப்படும்.
26,179 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் ,மானியத்தில் வழங்க ரூபாய் 170 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?
வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!
14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!
{{comments.comment}}