சென்னை: வர வர ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலில் வரும் கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளர்களின் பேச்சுக்கள் கடுப்படிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக 2 பேரின் பேச்சுக்களுக்குத்தான் மக்களிடையே கடும் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
மைக் கொடுத்து விட்டார்கள்.. வசதியாக உட்கார்ந்து வாய் நிறைய பேசலாம் என்ற ஒரே காரணத்திற்காக இவர்கள் பேசும் பேச்சுக்கள் எல்லாம்.. முடியலை சாமி!
ஒரு காலத்தில் கிரிக்கெட் போட்டிகள் என்றால் தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவில் மட்டும்தான் வர்ணனை ஒளி, ஒலி பரப்பாகும். பெரும்பாலும் இந்தி அல்லது ஆங்கில வர்ணனைதான் இருக்கும். பிறகுதான் தமிழ் வந்தது. அப்போதும் கூட இவற்றில் யாருக்கும் எந்தக் குறையும் இல்லை. அழகாக வர்ணனை செய்வார்கள். கேட்கவே நன்றாக இருக்கும்.
இதெல்லாம் ஐபிஎல் போட்டிகள் அறிமுகமாகும் வரைதான். ஐபிஎல் வந்தபோது கூடவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலில் தமிழ் வர்ணனையும் அறிமுகமானது. அன்று ஆரம்பித்தது இந்த தமிழ் வர்ணனை கொடுமை. ஆரம்பத்தில் இவர்கள் பேசிய பேச்சுக்களும், உபயோகித்த வார்த்தைகளும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. பலரும் விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.
இவர்கள் உச்சரிக்கும் தமிழ், பேசும் வார்த்தைகள் என்று எல்லாமே அபத்தம்தான். பெரும்பாலும் கிரிக்கெட் சாராமல் லூஸ் டாக் ரகமாகவே இருக்கும். அதிலும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வந்த பிறகு வர்ணனை இன்னும் காமாசோமாவாகி விட்டது. அவர் பேசுவதை கேட்கவே முடியவில்லை. பெரும்பாலான நேரங்களில் கத்துகிறார்.. என்னென்னவோ வார்த்தைகளைச் சொல்கிறார்.. அட்ரா மச்சான்.. விடாதடா.. கோவிந்தா கோவிந்தா.. பொட்லம் போடுடா.. அவனே இவனே.. என்று ஒரு மட்டு மரியாதை கிடையாது.. பொதுவெளியில் பேசுகிறோம்.. நாலு பேர் கேட்பார்கள்.. என்று எந்த விழிப்புணர்வும் இல்லாமல் அவர் பாட்டுக்கு அடித்து விடுகிறார்.
சில முன்னாள் வீரர்கள் மிகச் சரியாக பேசுவார்கள்.. அந்தப் போட்டி குறித்தும், வீரர்களின் ஆட்டம் குறித்தும், அவர்களது உத்திகள் குறித்தும் மட்டுமே தெளிவாக அடக்கமாக பேசுவார்கள். அதைக் கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது. ஆனால் ஸ்ரீகாந்த் பேசுவது அபத்தத்தின் உச்சகட்டமாக மாறி வருகிறது. அவர் எவ்வளவு பெரிய மனுஷன், எவ்வளவு பெரிய வீரர்.. எப்படிப்பட்ட அதிரடி ஆட்டக்காரர்.. ஆனால் அவர் கிரிக்கெட்டைப் பற்றி மட்டும் பேசாமல் ஏன் இப்படி அபத்த களஞ்சியமாக மாறி நிற்கிறார் என்று யாருக்குமே புரியவில்லை. யாரையும் பேச விடுவதும் இல்லை. குறுக்கே புகுந்து புகுந்து பேசுவார்.. இவர் பேசினால் நிறுத்த மாட்டார்.. விடாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்.. குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி மட்டும் பேசாமல் ஏதேதோ பேசுகிறார்.
எந்த வீரரையும் மரியாதையாக பேசுவதே இல்லை.. எல்லோருமே அவன் இவன்தான்.. இவரைப் பொறுத்தவரை.. யாருக்குமே மரியாதை தருவதில்லை. பொட்லம் கட்டு என்று அடிக்கடி சொல்கிறார். இதெல்லாம் என்ன வார்த்தை ஸ்ரீகாந்த் சார்.. ஒரு பெரிய மனுஷன் பேசுற வார்த்தையா.. அதேபோல எப்பப் பார்த்தாலும் கோவிந்தா கோவிந்தா.. என்று சொல்லிக் கொள்கிறார்.. இதை ஏன் அடிக்கடி சொல்கிறார் என்று தெரியவில்லை.
வர்ணனை செய்வோர் அதை மட்டுமே செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுதான் கிரிக்கெட் போட்டியையும் ரசித்துப் பார்க்க வைக்கும்.. தமிழில்தானே பேசுகிறோம் என்பதற்காக தாறுமாறாக பேசுவது அழகாகவா இருக்கிறது. இதுக்கு ஆங்கிலத்திலேயே வர்ணனையைக் கேட்டுக்கலாமே என்று ரசிகர்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர்.. இது 70களோ அல்லது 80களோ அல்ல.. 2K காலம்.!
ஸ்ரீகாந்த் மட்டுமல்ல, ஆர்.ஜே. பாலாஜி, முத்து போன்றோர் கூட நிறைய லூஸ் டாக் விடுகின்றனர். இவர்களும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு அழகுத் தமிழில் அருமையான கமெண்டரி கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால் இவர்கள் செய்வதையெல்லாம் பார்க்கும்போது கிரிக்கெட்டைப் பார்த்து ரசிக்காதீங்க.. நாங்க பண்ணும் சில்மிஷங்களைப் பார்த்து மட்டும் ரசிச்சால் போதும் என்று சொல்லாமல் சொல்வது போல உள்ளது.
முடியலப்பா முடியலை..!
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}