சென்னை: விளையாட்டு உலகில் குறிப்பாக கிரிக்கெட் உலகில், அதுவும் இந்திய கிரிக்கெட்டில் சில விஷயங்களை மறக்கவே முடியாது.. எப்படி இப்படி நடந்தது என்ற ஆச்சரியமும், ஆதங்கமும் நிலையாக இருந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் டி. நடராஜனின் எழுச்சியும், வீழ்ச்சியும்.
ஐபிஎல் மூலம் இந்திய கிரிக்கெட் உலகை தன் பக்கம் ஆச்சரியப் பார்வை பார்க்க வைத்தவர் டி. நடராஜன். தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்த டி. நடராஜன் அருமையான வேகப் பந்து வீச்சாளர். ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அவர் விளையாடிய விதம் ரசிகர்களை புல்லரிக்க வைத்தது. அதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் கவனத்தையும் ஈர்த்தது.
விராட் கோலி, ஹர்டிக் பாண்ட்யா உள்ளிட்ட பலரின் பாராட்டுக்களையும், ஆதரவையும் பெற்ற டி. நடராஜன் குறுகிய காலத்தில் படு வேகமாக புகழ் உச்சிக்கு வந்தவர். அதே வேகத்தில் இந்திய டெஸ்ட் அணியிலும் இடம் பெற்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடிய அவர் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல உதவினார்.. அவ்வளவுதான்.. அத்தோடு டி. நடராஜனின் கிரிக்கெட் வாழ்க்கை மங்கிப் போனது.
எவ்வளவு வேகத்தில் புகழ் உச்சியை அடைந்தாரோ அதே வேகத்தில் இறங்குமுகத்தைக் கண்டு இன்று முதல் தர கிரிக்கெட் போட்டியில் கூட விளையாட முடியாமல் உள்ளார் டி. நடராஜன். அவர் முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடியே 4 வருடங்களாகி விட்டன. அவர் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டிதான், அவரது கடைசி டெஸ்ட் போட்டியாகவும் உள்ளது.
கடந்த 2020-21 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில்தான் டி. நடராஜன் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு அவர் கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. 33 வயதிலேயே தனது கிரிக்கெட் வாழ்க்கையை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்து விட்டார் டி. நடராஜன்.
இதுகுறித்து டி. நடராஜன் அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் டெஸ்ட் போட்டியில் ஆடியே 4 வருடங்களாகி விட்டது. எனது வேலைப்பளுதான் இதற்குக் காரணம். டெஸ்ட் போட்டிகளில் ஆடினால் வேலைப்பளு மேலும் அதிகரிக்கும் என்பதால்தான் நான் விளையாடுவதில்லை. இப்போதைக்கு அதைத் தவிர்க்கிறேன். மேலும் எனது முழங்காலில் பிரச்சினையும் உள்ளது. எனவே விளையாடுவதை நிறுத்தி விட்டேன் என்று கூறுகிறார் டி.நடராஜன்.
தனது முதல் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்களை எடுத்தார் டி. நடராஜன். தற்போது டி20, ஒரு நாள் கிரிக்கெட் போன்றவற்றில்தான் ஆர்வம் காட்டுகிறாராம் டி. நடராஜன். எல்லாம் கை கூடி வந்தால் மீண்டும் ஆக்டிவ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட காத்திருப்பதாக கூறுகிறார் டி. நடராஜன். அடுத்த 2 ஆண்டுகளில் நல்ல பயிற்சி எடுத்தால் மீண்டும் ஆக்டிவாக விளையாட முடியும் என்று நம்புகிறார் டி. நடராஜன்.
நடராஜனிடம் கிரிக்கெட் இன்னும் சிறப்பாக இருக்கிறது என்பதை கடந்த ஐபிஎல் தொடர் நிரூபித்தது. அந்தத் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிய அவர் 14 போட்டிகளில் 19 விக்கெட்களை வீழ்த்தியதிலிருந்து உணரலாம். இந்திய அணிக்காக 2 ஒரு நாள் போட்டிகள், 4 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் டி. நடராஜன்.
மிகப் பெரிய அளவில் வருவார், அடுத்த கபில் தேவ் இவர்தான் என்றெல்லாம் பேசப்பட்ட டி. நடராஜன் பெரிய அளவில் சோபிக்காமல் மங்கிப் போனது கிரிக்கெட்டுக்கு துரதிர்ஷ்டம்தான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!
அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!
கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!
குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!
{{comments.comment}}