- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: பிரியாணியே செம கெத்துதான்.. அதுக்கே ஒரு உணவு டப் கொடுக்குதுன்னா நம்புவீங்களா.. அட நம்பித்தாங்க ஆகணும்.. அப்படி ஒரு கெத்தான டிஷ் இருக்கு.. அதைத்தான் இப்ப பார்க்கப் போறோம்.
பூண்டு + தக்காளி .. இதை வைத்து செய்யும் இந்த கிரேவி இருக்கே.. பிரியாணியேயே கொஞ்சம் பேக்குல போ தம்பி என்று ஓரம் கட்டி விடும்.. அப்படி ஒரு சுவை, மணம் அன்ட் அசத்தலான டிஷ் இது. செஞ்சு சாப்ட்டு பாருங்க.. நாங்க சொன்னது எவ்வளவு கரெக்ட்னு உங்களுக்கே புரியும்.
சரி இப்ப பூண்டு தக்காளி கிரேவி எப்படி பண்றதுன்னு பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்
தக்காளி - ஏழு பொடியாக கட் செய்யவும்
சின்ன வெங்காயம் - ஆறு உரித்து கட் செய்யவும்
பூண்டு - 23 பல் (தேவைக்கேற்ப)
பிரியாணி இலை - மூணு
புதினா இலை - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - நான்கு (அல்லது) மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறிய அளவு தட்டிக் கொள்ளவும்
அன்னாசிப்பூ - 2
பட்டை கிராம்பு - 2+ 2
எண்ணெய் - 6 ஸ்பூன்
ஏலக்காய் - 2
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
சோம்பு - 1/4 ஸ்பூன்
செய்முறை
1. கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி + பூண்டு தட்டியது + சின்ன வெங்காயம் + பூண்டு + பிரியாணி இலை சோம்பு + புதினா + பச்சை மிளகாய் + அன்னாசிப்பூ + பட்டை கிராம்பு ஏலக்காய் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
2. பூண்டு வெங்காயம் வதங்கியதும் தக்காளி கட் செய்ததை சேர்க்கவும்.
3. மஞ்சள் பொடி சேர்க்கவும்.
4. உப்பு (தேவைக்கு ஏற்ப சேர்க்கவும்) தக்காளி கிரேவி மணமணக்குதா..!
5. நன்றாக கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் பிரியாணி ஸ்மெல் வருதா..!
6. சூடான சாதம் வடித்து அல்லது குக்கர் சாதம் சிறிது ஆறிய பிறகு தக்காளி கிரேவி சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். சுவையான பூண்டு தக்காளி பிரியாணி ரெடி.
இப்ப வெளில எட்டிப் பாருங்களேன்.. மழை பெய்யுதா.. கரெக்ட்.. இந்த மாதிரி மழை சமயத்துல இந்த பூண்டு தக்காளி கிரேவி பிரியாணி செம சூப்பரா இருக்கும் + காரச்சாரமான உணவும் கூட.
அது மட்டுமா.. கர்ப்பிணி பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் இது ஆப்டான உணவும் கூட.
நாளைக்கு செஞ்சு சாப்பட்டு பாருங்க.. அப்புறம் எப்படி இருந்துச்சுன்னும் மறக்காம சொல்லுங்க.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}