- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கொங்கு பகுதியில், மிகவும் பிரபலமான உணவுகளில் இந்த தக்காளி நெல்லி சாதமும் ஒன்று. சாப்பிடவே சூப்பராக இருக்கும்.
மத்தியானம் நல்ல பசியில் இருக்கும்போது இதை சொல்றீங்களே.. கொஞ்ச நேரம் முந்தி சொல்லியிருந்தா சுடச் சுடச் செஞ்சு பார்த்திருப்போமேன்னு தானே நினைக்கறீங்க.. எப்படி கேட்ச் பண்ணோம் பாத்தீங்களா உங்க மைன்ட் வாய்ஸை.. அதனால் என்ன நாளைக்கு செஞ்சு சாப்பிடுங்க.. இப்ப யாரு கேக்கப் போறா.
சரி வாங்க கிச்சனுக்குள் போகலாம்.. ரெசிப்பி பாக்க!
தேவையான பொருட்கள்
தக்காளி - 6
பெரிய நெல்லிக்காய் - பாதி துருவியது
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
அன்னாசிப்பூ - 3
பட்டை கிராம்பு - தலா 3
ஏலக்காய் - 1
பச்சை மிளகாய் - 3 (கீறியது)
சோம்பு - 1/4 ஸ்பூன்
புதினா - 15 இலைகள்
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
(உப்பு புளி காரம்.. எப்பவுமே உங்களோட தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப பயன்படுத்திக்கணும், சரியா)
சரி, பொருட்கள் எல்லாம் எடுத்தாச்சா. அடுத்து, இப்ப செய்முறையைப் பார்ப்போம்
செய்முறை
1. கடாயில் எண்ணெய் ஊற்றி + பட்டை கிராம்பு அன்னாசி பூ, ஏலக்காய் சோம்பு போடவும்.
2. பச்சை மிளகாய் + இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் + மஞ்சள் தூள் கால் ஸ்பூன் + புதினா போடவும்.
3. தக்காளி சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்
4. எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கிளறவும் (சிம்மில் வைத்து கிளறவும்)
5. கடைசியாக பெரிய நெல்லிக்காய் துருவல் போடவும். அடுப்பை அணைத்த பின் நன்கு கிளறவும்.
6. இந்த தக்காளி தொக்கு ஆறியவுடன் சாதத்துடன் கிளறவும்.
7. குக்கர் சாதம் வடித்த சாதத்துடன் உப்பு போட்டு கிளறவும். சுவையான தக்காளி நெல்லி சாதம் ரெடி
லன்ச்சுக்கு சூப்பரான ஒரு டிஷ்தான் இந்த தக்காளி நெல்லி சாதம். கூடவே உடம்புக்கும் நல்லதுங்க.. சாப்ட்டு பாருங்க. பசங்களுக்கும், உங்க வீட்டுக்காரருக்கும் கூட லன்ச்சுக்கு கொடுத்து அனுப்புங்க..!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
கொங்கு நாட்டு நெல்லி, தக்காளி சட்னி + multigrains ஆட்டா அடை.. செம காம்போ மக்களே.. சாப்ட்டு பாருங்க
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
தொடர் உயர்வில் தங்கம்... சவரன் 57,000த்தை தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி.. இப்படியே போனால் எப்படி!
சீனாவுக்குப் போகும்.. தமிழர்களின் மனம் கவர்ந்த மகாராஜா.. விஜய் சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி!
Ramanathapuram Rains: ராமநாதபுரத்தை வச்சு செய்த மேக வெடிப்பு.. மழை தொடருமாம் மக்களே!
{{comments.comment}}