- ஸ்வர்ணலட்சுமி
தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு ஃபேமஸ் ஆனதாக இருக்கும். திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா, அம்பூர் பிரியாணி, மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா என ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் உண்டு. அதேபோலத்தான் சேலத்திலும் ஏகப்பட்ட ஸ்பெஷல்கள் உள்ளன.
வழக்கமாக சேலம் என்றால் அனைவருக்கும் மாம்பழம் தான் ஸ்பெஷல் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது சீசனுக்கு வரும் பழம் தான். அனைத்து சீசனுக்கும் ஏற்றவாறு சத்தான, ஆரோக்கியமான உணவு ஒன்றும் சேலத்தில் மிகவும் பிரபலம். அந்த உணவு தான் அவல் சுண்டல்.
அவல் சாப்பிட்டிருப்போம்.. சுண்டலும் சாப்பிட்டிருப்போம்.. எல்லாமே தனித் தனியாத்தானே சாப்பிட்டிருப்போம்.. சேலத்தில் ரொம்ப ஸ்பெஷலான இந்த அவல் சுண்டல் வேற லெவல் டேஸ்ட்டா இருக்குங்க.
பலருக்கும் பரிட்சியம் இல்லாத இந்த அவல் சுண்டலை சூப்பராக எப்படி செய்யலாம் என்பதை வாங்க தெரிஞ்சுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
அவல் - 200 கிராம்
சிறிய வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - 3
கடுகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லி இலைகள் - தலா 10
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
வேர்க்கடலை - 2 ஸ்பூன் அல்லது முந்திரி - 10 பல்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
சன்னா சுண்டல் 150 கிராம். இரவே ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
(உப்பு, புளி, காரம் சுவைக்கும், தேவைக்கும் ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்)
செய்முறை :
* அவலை நன்கு கழுவிய பிறகு 1/2 டம்ளர் தண்ணீர் தெளித்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அரை மணி நேரம் ஊறிய பிறகு தாளிக்க வேண்டும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கடலை பருப்பு, முந்திரி அல்லது வேர்க்கடலை, கறிவேப்பிலை, சிறிய வெங்காயம் நறுக்கியது, பச்சை மிளகாய் கீறியது ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பருப்பு வகைகள் பொன்னிறமாக வதங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, ஊற வைத்த அவலை சேர்த்து, அதோடு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளற வேண்டும். அடி பிடிக்காமல் நன்கு கிளற வேண்டும்.
* பிறகு வேக வைத்து, தண்ணீர் வடித்த சுண்டலையும் சேர்த்து கிளறி, மல்லி இலைகளை தூவி இறக்கி பறிமாறலாம். அவ்வளவு தான் சூடான, சுவையான அவல் சுண்டல் ரெடி.
* இந்த சூடான அவல் சுண்டலை காலை உணவாக, மாலையில் ஸ்நாக்சாக எடுத்துக் கொள்ளலாம்.
* பூஜைக்கும் இது எளிமையான நைவேத்தியமாக பயன்படுத்தலாம்.
பயன்கள் :
சரி இதை சாப்பிட்டால் என்னெல்லாம் பலன் இருக்கு தெரியுமா?
அவலை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை போக்கி, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதற்கும் இது உதவுகிறது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு அவல், சுண்டல் இரண்டுமே பெஸ்டான உணவுகள். சுண்டலில் மெக்னீசியம் அதிகம் உள்ளதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கும். இரும்பு சத்தும் அதிகம் என்பதால் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க செய்யும்.
அட எங்கங்க ஓடறீங்க.. ஓ .. அவல் சுண்டல் பண்ணப் போறீங்களா.. ஓகே ஓகே.. சாப்பிட்டுட்டு மறக்காம எப்படி இருந்துச்சுன்னு கமெண்ட் பண்ணிட்டுப் போங்க.. have a nice dayங்க!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெஞ்சல் புயல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.2000 நிவாரணம் .. முதல்வர் ஸ்டாலின்
உள்நோக்கத்தோடு அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியுள்ளனர்.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு புகார்
சாத்தனூர் அணை திறப்பு.. குறை கூறும் அதி மேதாவிகளே இதைப் படிங்க.. துரைமுருகன் விரிவான அறிக்கை!
சாத்தனூர் அணை விவகாரம் .. தமிழ்நாடு அரசுக்கு.. டாக்டர் அன்புமணி ராமதாஸின் 7 கேள்விகள்!
புயல் பாதித்த குடும்பங்களை.. தவெக அலுவலகத்திற்கு அழைத்து வந்து.. உதவிகள் வழங்கிய விஜய்
Cooking Tips.. இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையான .. கடாய் காளான் கிரேவி!
அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விட்டதே பாதிப்பிற்கு காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட.. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல்!
கருத்து சுதந்திரம்.. சினிமா விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க முடியாது... சென்னை ஹைகோர்ட் அதிரடி
{{comments.comment}}