முப்பெரும் தேவி தெரியும்.. மொறுமொறுப்பான, சத்தான, சுவையான முப்பருப்பு தோசை சாப்பிட்டிருக்கீங்களா?

Nov 14, 2024,03:13 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை: 3 பருப்புகளைக் கலந்து செய்யும் தோசைதான் இந்த முப்பருப்பு தோசை. முப்பருப்பு தோசை புரதச்சத்து மிக்கது. மிக மிக சுவையானது மட்டுமல்ல சத்தானதும் கூட. ஆரோக்கிய சமையல்  -ஆரோக்கிய சாப்பாட்டை விரும்புவோர் கண்டிப்பாக தங்களுடைய மெனுவில் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒரு உணவு இந்த முப்பருப்பு தோசை. 


சரி வாங்க இதை எப்படி பண்றது அப்படின்னு பார்க்கலாம்


தேவையான பொருட்கள் 


துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப் 

இட்லி அரிசி - அரை கப் 

பச்சரிசி - அரை கப் (இரண்டும் சேர்த்து ஒரு கப் அளவிற்கு எடுக்கவும்)

சீரகம் - 1 ஸ்பூன் 

வர மிளகாய் - 3

வெந்தயம், உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன் பிளஸ் உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன் 

பெருங்காயம் - 1/4 ஸ்பூன் 

கறிவேப்பிலை மல்லித்தழை - ஒரு கைப்பிடி 

பெரிய வெங்காயம் - 1 பெரியது (பொடியாக கட் செய்யவும்)

பூண்டு + இஞ்சி - ஆறு பல் பிளஸ் சிறிது

உப்பு காரம் - தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப 




இனி செய்முறை 


1. மூன்று பருப்பு, இரண்டு அரிசி, வெந்தயம், இஞ்சி, உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் சீரகம், வரமிளகாய், பூண்டு விருப்பத்திற்கு போடலாம் போடாமலும் செய்யலாம்.


2. இவை அனைத்தும் 3 மணி நேரம் ஊற வைக்கவும் (நன்றாக கழுவிய பிறகு)


3. மிக்ஸியில் நன்றாக ஊறிய தண்ணீர் சிறிது சிறிதாக விட்டு நைசாக அரைக்கவும்.


4. உப்பு சேர்த்து பெருங்காயம் மல்லித்தழை கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கவும். அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.


5. பிறகு தோசை கல்லில் மெலிதாக ஊற்றி எண்ணெய் விட்டு கிரிஸ்பியான தோசை வார்க்கவும்.


சூப்பரான சுவையான இந்த தோசைக்கு வெங்காய சட்னி அல்லது தேங்காய் சட்னி அல்டிமேட் டெஸ்ட் கொடுக்கும். பிரேக்ஃபாஸ்ட், டின்னருக்கு இது ஒரு டேஸ்டியான தோசையாக இருக்கும். பேச்சலர்ஸ், தனிக்குடித்தனம் நடத்தும் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். விருப்பமாக சாப்பிடுவார்கள். புரதச்சத்து அதிகம் உள்ள கிறிஸ்பியான இந்த தோசை டயாபடீஸ் பேஷண்டுகளுக்கு நல்ல filling ஆன உணவு.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்