Saif Ali Khan.. சைப் அலிகான் தாக்குதல் வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.. மும்பை போலீஸ் மறுப்பு

Jan 17, 2025,05:41 PM IST

மும்பை: நடிகர் சைப் அலி கான் வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றபோது கத்தியால் குத்தி அவரைக் காயப்படுத்திய நபரை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அந்த நபருக்கும், தாக்குதல் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று காவல்துறை விளக்கியுள்ளது.


நடிகர் சைப் அலிகானின் வீடு மும்பை பந்த்ரா பகுதியில் உள்ளது. இந்த வீட்டுக்குள் அதிகாலையில் நுழைந்த ஒரு நபர் அங்கு திருட்டில் ஈடுபட முயன்றதாகவும், அப்போது ஏற்பட்ட மோதலில் சைப் அலிகானை அவர் சரமாரியாக கத்தியால் குத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சைப் அலிகான் கத்திக் குத்துக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர் சிகிச்சை நடந்து வருகிறது.




இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸார், பல்வேறு படைகளை அமைத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரைப் பிடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தினர். சிசிடிவி காட்சிப் பதிவுகளை வைத்தும் தேடுதல் வேட்டை நடந்து வந்தது. இதில் ஒரு நபர் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின.


அந்த நபர் யார் என்ற விவரம் தெரியவில்லை. அவரை போலீஸார் பந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் அங்கு வைத்து விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணைக்குப் பின்னர் அந்த நபருக்கும், சைப் அலிகான் தாக்குதல் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்று தெரிய வந்ததாக காவல்துறை தெளிவுபடுத்தியது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.


சைப் அலி கான் தாக்குதலில் ஈடுபட்ட நபரைப் பிடிக்க, கிட்டத்தட்ட 20 தனிப்படைகளை அமைத்து குற்றவாளியை போலீஸார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது. 


பந்த்ராவில் 12 மாடிக் கட்டடத்தில்தான் சைப் அலிகானின் வீடு உள்ளது. இதில் நான்கு மாடிகளில் சைப் அலிகான் மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சைப் அலிகானின் வீட்டில் வேலை செய்து வரும் பெண் ஒருவருக்கு தெரிந்தவர்தான் கத்திக் குத்து சம்பவத்தில் ஈடுபட்டவர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டுக்குள் புகுந்த  அந்த நபர், பணிப்பெண்ணிடம் ஏதோ தகராறு செய்துள்ளார் என்று தெரிகிறது. இதை சைப் அலிகான் தட்டிக் கேட்டபோதுதான் அவர் தாக்கப்பட்டார். எனவே அந்த நபர் பணிப் பெண்ணைக் குறி வைத்து வந்திருக்கலாம்.. இடையில் சைப் அலிகான் குறுக்கிட்டதால் ஆத்திரத்தில் அவரைக் குத்தி விட்டு தப்பியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


ஆனால் பாதுகாப்பு மிக்க வீட்டுக்குள் அந்த நபர் எளிதாக புகுந்து ஊடுறுவியதுதான் இப்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்