சூரிய கிரகணம் 2024 .. ஆண்டின் கடைசி கிரகணம்.. அதை விடுங்க.. இந்தியாவில் பார்க்க முடியுமா?

Oct 01, 2024,06:36 PM IST

டில்லி : 2024ம் ஆண்டில் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 02ம் தேதி நிகழ உள்ளது. இது எந்த நேரத்தில் நிகழ உள்ளது? இந்தியாவில் இதை பார்க்க முடியுமா? என்பதை பற்றி வாங்க தெரிஞ்சுக்கலாம்.


சூரியனுக்கும், பூமிக்கு இடையே சந்திரன் கடக்கும் நிகழ்வை சூரிய கிரகணம் என்று சொல்கிறோம். ஆனால் இதனால் சூரியன் முழுவதுமாக மறைந்து விடாது. ஒரு நெருப்பு வளையம் போன்ற தோற்றத்தில் சூரியன் தெரியும். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சூரியன் மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்வது உண்டு.




இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 08ம் தேதி நிகழ்ந்த நிலையில், இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 02ம் தேதியான நாளை நிகழ உள்ளது. இந்திய நேரப்படி அக்டோபர் 02ம் தேதி இரவு 09.13 மணிக்கு துவங்கி, அக்டோபர் 03.ம் தேதி அதிகாலை 03.17 வரை இந்த கிரகணம் நீடிக்கும்.  கடைசி 7 நிமிடங்கள் 25 விநாடிகள் உச்சபட்ச கிரகண நேரமாக சொல்லப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை இரவு நேரத்தில் இந்த சூரிய கிரகணம் நிகழ்வதால் இதனை பார்க்க முடியாது. இந்தியாவின் எந்த பகுதியில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது.


அதே சமயம் தெற்கு அமெரிக்கா, குறிப்பாக சிலி, அர்ஜெண்டினா, பசிபிக் பெருங்கடல், பெரு, ஃபிஜி, பிரேசில், உருகுவே  உள்ளிட்ட நாடுகளிலும், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் சூரிய கிரகணத்தை காண முடியும். இந்த சூரிய கிரகணம் 93 சதவீதம் சூரியனை மறைக்கும் நிகழ்வாக நிகழும் என சொல்லப்படுகிறது. 


சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது என்றாலும், மற்ற ஆசிய நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் காண முடியும் என சொல்லப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!

news

சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்.. அன்போடு அழைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 15, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

CSK vs LSG.. சென்னை சூப்பர் கிங்ஸ் அட்டகாச வெற்றி.. அசத்தலாக ஆடிய தோனி, துபே.. ரசிகர்கள் ஹேப்பி!

news

மக்களே எச்சரிக்கையாக இருங்க.. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம்..!

news

பாஜக கூட்டணியால்.. அதிமுகவிலிருந்து விலகிட்டாரா.. டி. ஜெயக்குமார் தரப்பு சொல்லும் விளக்கம் இதுதான்!

news

ரஜினிகாந்த் வழிக்கு மாறிய அண்ணாமலை.. பாபா முத்திரையுடன் போஸ்.. ஆன்மீக பயணம்!

news

மீன் பிடி தடைக் காலம்.. ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை அறிவிப்பு..இன்று நள்ளிரவு முதல் அமல்!

news

இந்திய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளுக்கு.. கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

அதிகம் பார்க்கும் செய்திகள்