சென்னை : சூர்யா நடிக்க உள்ள சூர்யா 43 படத்தின் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் அறிவிப்பு வீடியோவிலேயே ரசிகர்களின் ஆர்வத்தை எக்கசக்கமாக தூண்டி உள்ளார்கள்.
இறுதிச் சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமான சுதா கொங்கரா, சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கினார். இந்த படம் தேசிய விருதினை மட்டுமின்றி சர்வதேச விருதுகள் பலவற்றை வென்றது. ஆஸ்கார் விருது என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் அது கை நழுவி போனது. மீண்டும் இவர்கள் கூட்டணி எப்போதும் இணையும் என ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. சூர்யாவின் 43வது படத்தை சுதா கொங்கரா தான் இயக்க போகிறார். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது ஜி.வி.பிரகாஷின் 100 வது படம் ஆகும். இந்த படத்தில் சூர்யாவுடன், துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட உள்ளது என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் அறிவிப்பையே டிரைலர் ரேஞ்ஜுக்கு வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள். ரத்தம் தெறிக்கும் சூர்யாவின் கண்கள், துப்பாக்கி கையில் ஏந்திய துல்கர் சல்மான், போராட்டம், ராணுவம், கலவரம் என பலவற்றையும் பின்னணியில் கொண்டு வந்து படத்தின் கதை என்னவாக இருக்கும், யாருக்கு என்ன ரோல் என்பது உள்ளிட்ட பல கேள்விகளை அனைவரின் மனதிலும் ஏற்படுத்தி உள்ளனர்.
அது மட்டுமா? கடைசியாக வீடியோவின் முடிவில் புறநானூறு என்று மட்டும் படத்தின் டைட்டிலை காட்டி உள்ளனர். இது படத்தின் முழு பெயர் கிடையாது. இதற்கு முன்பு இரண்டு வார்த்தைகள் உள்ளது போல் சஸ்பென்ஸ் வைத்து முடித்துள்ளனர். இதனால் படத்தின் கதை என்ன என்பதை தாண்டி, படத்திற்கு அப்படி என்ன டைட்டில் வைத்திருப்பார்கள்? முன்னால் வரும் அந்த இரண்டு வார்த்தைகள் என்ன? என ரசிகர்களை கேட்க வைத்துள்ளனர்.
சூர்யா, சுதா கொங்கரா, 2டி, ஜி.வி.பிரகாஷ் என அனைவரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். படத்தின் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே ட்விட்டரில் #Suriya43, #Kanguva, #Purananooru போன்ற ஹேஷ்டேக்குகள் செம டிரெண்டாகி வருகின்றன.
வங்க கடலில் இன்று உருவாகிறது.. காற்றழுத்த தாழ்வு.. நாளை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!
நவம்பர் 23 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
இன்று நிதானமாக செயல்பட வேண்டிய 2 ராசிக்காரர்கள் இவங்க தான்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக - ஜேஎம்எம் இடையே போட்டா போட்டி.. மகாராஷ்டிராவில் பாஜக கை ஓங்குகிறது
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
{{comments.comment}}