காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான 370 வது சட்டப் பிரிவை நீக்கியது செல்லும் - சுப்ரீம் கோர்ட்

Dec 11, 2023,05:30 PM IST

டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான 370வது சட்டப் பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி ஏமாற்றம் தெரிவித்துள்ளது.


ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுடன் இணைய முடிவு செய்தது. அன்று முதல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. இந்தியாவுடன் இணைந்தபோது அதற்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் அந்த மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து. அரசியல் சாசனத்தின் 370வது பிரிவின் கீழ் இந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு வந்தது.


இந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவை மத்திய அரசு 2019ம் ஆண்டு அதிரடியாக ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. லடாக் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.




இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. இன்று இந்த பெஞ்ச் தனது தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:


இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைந்தபோது அதற்கு என்று தனியாக எந்த இறையாண்மையும் அளிக்கப்படவில்லை. தனது இறையாண்மையை இந்தியாவிடம் முழுமையாக ஜம்மு காஷ்மீர் ஒப்படைத்து விட்டது.


ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து என்பது தற்காலிகமானதே. அது நிரந்தரமானது அல்ல. ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை இப்போது இல்லாத நிலையில் இந்த சிறப்பு அந்தஸ்தை நீட்டிப்பது என்பது அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிரானதாகவே அமையும்.


ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையும் கூட நிரந்தரமானது அல்ல. அரசியல் சாசனத்தை வகுப்பதற்கு வசதியாகவே அது ஏற்படுத்தப்பட்டது.  மேலும் அதன் முடிவுகளை குடியரசுத் தலைவர் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.


ஜம்மு காஷ்மீருக்கு செப்டம்பர் 2024ம் ஆண்டுக்குள் பொதுத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் மொத்தம் 3 தீர்ப்புகள் வழங்கப்பட்டன. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூரியா காந்த் ஆகியோர் ஒரு தீர்ப்பை அளித்தனர். நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஒரு தீர்ப்பை அளித்தார். 3வது தீர்ப்பை நீதிபதி  சஞ்சய் கண்ணா அளித்தார்.


தேசிய மாநாட்டுக் கட்சி ஏமாற்றம்


ஜம்மு காஷ்மீர் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் முக்கிய கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, இந்தத் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்