அரசியலையும் மதத்தையும் பிரித்தால் .. வெறுப்பு பேச்சு குறையும்.. சுப்ரீம் கோர்ட்

Mar 30, 2023,12:41 PM IST
டெல்லி: நாட்டில் வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்து வருகின்றன. அரசியல்வாதிகள், மதத்தை அரசியலில் கலக்காமல் அதைக் கைவிட்டால்தான், வெறுப்பு பேச்சுக்களும் ஒழியும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

பல்வேறு மாநில அரசுகள் அவதூறு வழக்குகள் குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவை நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்தினா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தபோது இந்தக் கருத்தை வெளியிட்டது.



நீதிபதி கே.எம்.ஜோசப் கூறுகையில், ஜவஹர்லால் நேருவும், அடல் பிஹாரி வாஜ்பாயும் பேசினால், அதைக் கேட்பதற்கு மக்கள் அலைகடலென திரண்டார்கள். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அவர்களது பேச்சுக்கள் சென்றடைந்தன.

எப்போது பிரச்சினை வருகிறது என்றால் மதத்துடன், அரசியலைக் கலக்கும்போதுதான். இந்த வேலையை செய்வது அரசியல்வாதிகள்தான். மதத்தையும், அரசியலையும் பிரித்து வைக்க வேண்டும். அதை செய்யும்போதுதான் இந்த வெறுப்பு பேச்சுக்களும் ஒழியும். இதை அரசியல்வாதிகள்தான் செய்தாக வேண்டும்.  அரசியலுடன் மதத்தைக் கலப்பது ஜனநாயகத்திற்குப் பேராபத்தாகும்.

எத்தனை நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத்தான் போடுவது.. யாரையும் நாங்கள் அவதூறாகப் பேச மாட்டோம். வெறுப்பு பேச்சை வெளியிட மாட்டோம். யாரையும் இழிவுபடுத்த மாட்டோம் என்று இந்த நாட்டு மக்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பு அடுத்த தரப்பை இழிவுபடுத்தும், கேவலப்படுத்தியும் பேசிக் கொண்டேதான் இருக்கிறது. டிவியிலும், சமூக வலைதளங்களிலும் இதைத்தான் பார்க்கிறோம்.

நாங்கள் அரசியல்சாசனத்தை பின்பற்றுகிறோம். அதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு தீர்ப்பையும் சொல்கிறோம். ஒவ்வொரு தீர்ப்பும், சட்டத்தால் கட்டமைக்கப்பட்ட கட்டடத்தின் செங்கல் போலாகும். அவதூறு வழக்குகள் மீது மாநில அரசுகள்  உரிய நடவடிக்கை எடுக்காமல் தாமதிப்பது நல்லது.  மாநில அரசுகள் செயலிழக்கும்போது அதன் வேலையை சுப்ரீம் கோர்ட் பார்க்க நேரிடுகிறது. ஏன் மாநில அரசுகள் இப்படி மெத்தனமாக இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்