சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்குள்ளாகி, சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் அவருக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சையெல்லாம் நடந்தது. அதன் பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களும் ஏற்கவில்லை. இதனால் ஜாமின் கிடைக்காமல் தொடர்நது சிறைவாசம் அனுபவித்து வந்தார் செந்தில் பாலாஜி.
இந்த நிலையில் கடந்த 15 மாதமாக வெறும் விசாரணைக் கைதியாகவே தான் சிறையில் அடைபட்டிருப்பதாகவும், உடல் நிலை சரியில்லை என்றும் கூறி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மே மாதம் மேல் முறையீடு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.
இன்று உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்த்தரவிட்டது. அதன்படி தினசரி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 2 நபர் உத்தரவாதத்தின்பேரில் செந்தில் பாலாஜி ஜாமின் பெறலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திமுகவினர் கொண்டாட்டம்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்துள்ளதால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். கரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் திமுகவினரர் பட்டாசு வெடித்தும் லட்டு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய்க்கு கோபம் வருவதற்காக தான் அஜித்துக்கு வாழ்த்து கூறுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?: டாக்டர் தமிழிசை
Deepavali special.. மொறுமொறுன்னு.. சாப்பிட்டா விறுவிறுன்னு.. ரிப்பன் பூண்டு பக்கோடா!
தமிழ்நாட்டில் மழை.. தீபாவளியன்னிக்கு யாருக்கெல்லாம் கன மழை காத்திருக்கு.. லிஸ்ட்டைப் பாருங்க!
முத்திரை பதித்த பேரரசர்.. அரசியலின் முக்கிய அடையாளம்.. பசும்பொன் தேவருக்கு விஜய் புகழாரம்
டக்குன்னு அஜீத் பக்கம் திரும்பிய உதயநிதி ஸ்டாலின்.. கடகடவென பாலோ செய்த அமைச்சர்கள்!
Chennai Rains.. அண்ணாநகரை வச்சு செஞ்ச மழை.. 1 மணி நேரத்தில் 100 மி.மீ.. இது லிஸ்ட்லேயே இல்லையே!
Deepavali special sweet: செம டேஸ்ட்டு.. சூப்பர் ஸ்வீட்டு.. தீபாவளிக்கு முந்திரி கேக் செய்யலாமா?
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வீரராக பிறந்து வீரராக மறைந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
{{comments.comment}}