மதத்தின் அடிப்படையில் வெறுப்பை பரப்பினால்.. உங்களை அது திருப்பியடிக்கும்.. சுப்ரீம் கோர்ட்

Feb 07, 2023,10:01 AM IST
டெல்லி: மதத்தின் அடிப்படையில் வெறுப்பை பரப்ப யாருக்கும் உரிமை கிடையாது. இன்று நீங்கள் அதைச் செய்தால் நாளை அது உங்களுக்கே திரும்பி வரும் என்று உச்சநீதிமன்றம், உத்தரப் பிரதேச போலீஸுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



2021ம் ஆண்டு நொய்டாவில் நடந்த ஒரு மத வெறுப்பு குற்றச் செயல் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் நொய்டா போலீஸார் தாமதம் செய்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இந்தக் கருத்தை தெரிவித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்தினா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கின் புகார் நகலையும்,  குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனரா என்ற விவரத்தையும் தெரிவிக்குமாறு உ.பி. போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது 

வழக்கின் விசாரணையின்போது உ.பி. காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.என். நடராஜிடம் நீதிபதி ஜோசப் கூறுகையில், மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் பெயரால் எந்தக் குற்றச் செயலுக்கும் இடம் கிடையாது.  இதை வேரோடு கிள்ளி எறிய வேண்டும்.  இதுபோன்ற குற்றச் செயல்களை மாநில அரசு பொறுத்துக் கொள்ளக் கூடாது. இது மாநில அரசின் முதன்மையான கடமையாகும். இதுபோன்ற செயல்களை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் பலரின் உயிருக்கு ஆபத்து நேரிடும்.

இந்த விவகாரத்தை மூடி மறைக்க உ.பி.அரசு முயலக் கூடாது. வளர்ந்த நாடுகளின் காவல்துறைக்கு நிகராக நமது காவல்துறையும் நியாயமாக உறுதியாக செயல்படுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். நாங்கள் எதையும் மிகைப்படுத்திப் பேசவில்லை. எங்களது கோபத்தைத்தான் வெளிப்படுத்துகிறோம். சிறுபான்மை சமூகமோ, பெரும்பான்மை சமூகமோ..யாராக இருந்தாலும் சரி.. மனிதர்களுக்குரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும். நாம் ஒருதாய் மக்களாக, ஒரே நாடாக இருக்கிறோம். அது தொடர வேண்டும் என்றால் இதுபோன்ற குற்றச்செயல்களைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்..

62 வயதான காஸீம் அகமது ஷெர்வானி என்பவர் தொடர்ந்த வழக்குதான் இது. நொய்டாவில் நடந்த சம்பவத்தில் காஸீம் அகமது ஷெர்வானியை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியது. மத வெறியுடன் நடந்த தாக்குதல் இது. இதுதொடர்பாக காவல்துறை சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால்தான் காஸீம் அகமது ஷெர்வானி சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளார்.

நேற்று இந்த வழக்கு விசாரணையின்போது காஸீம் அகமது ஷெர்வானி சார்பாக ஆஜரான வக்கீல் ஹுசைபா அகமதி வாதிடுகையில், சுப்ரீம் கோர்ட் தலையீட்டின் பேரில் வழக்கில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது நொய்டா காவல்துறை. ஆனால் இன்று வரை விசாரணை நடந்து வருவதாக கூறுகிறார்கள். அதேசமயம், இது மதவெறித் தாக்குதல் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். இப்படிப்பட்டவர்களிடம் எப்படி நியாயமான விசாரணையை எதிர்பார்க்க முடியும்.

சம்பவம் நடந்த அன்றே ஏன் எப்ஐஆர் போடவில்லை. பாதிக்கப்பட்டவர் மத ரீதியில்தான் துவேஷத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார் என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

IMD Alert: ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை.. வலுவிழக்கும்.. புயலாக மாற வாய்ப்பில்லை!

news

6 மாவட்டங்களில் அதி கன மழை.. 4 மாவட்டங்களில் மிக கன மழை.. நாளை.. வானிலை மையம் தகவல்

news

மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஐசியு.,வில் அனுமதி.. தீவிர சிகிச்சை

news

Cyclone Memes: "நான்லாம் வந்தேன்னு வை.. புதுச்சேரியை இப்படி ஒரு புரட்டு..சென்னையை அப்படி ஒரு புரட்டு

news

ஆழ்ந்த காற்றழுத்தம் எப்போது புயலாக மாறும்.. டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தரும் விளக்கம் இதுதான்!

news

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை இல்லை:.. அமைச்சர் பி.கே. சேகர்பாபு

news

Drumsticks: கிடுகிடு வென உயர்ந்து வரும் முருங்கை விலை.. கிலோ ரூ.100.. எப்படி சாம்பார் வைக்கிறது!

news

புயல் சின்னம் எதிரொலி.. சென்னையில் 29ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை கன மழை பெய்யும்.. பிரதீப் ஜான்

news

பிரியங்கா காந்தி எனும் நான்.. அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி பதவியேற்றார் பிரியங்கா காந்தி

அதிகம் பார்க்கும் செய்திகள்