சூடான விவாதத்திற்குப் பின்னர்.. அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை.. மே 9க்கு ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்!

May 07, 2024,05:57 PM IST

டில்லி: மதுபான கொள்கை வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வருகின்ற 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.


புதிய மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் டெல்லி  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடி வந்தார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கைவிட்ட நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க துறையால், அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை எதிர்த்தும், உடனடியாக தன்னை விடுவிக்க கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு  விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்வர்ணகாந்த் சர்மா, மதுபான கொள்கை விவகாரத்தில் கெஜ்ரிவாலின் பங்கு இருப்பது, அமலாக்கத்துறை ஆதாரங்களில் இருந்து தெரிய வருகிறது. டெல்லி மதுபான கொள்கை உருவாக்கத்தில் மனுதாரர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய  பங்காற்றி உள்ளார் என்று கூறி டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். 




டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டை சந்தித்து இந்த வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுக்க கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். கடந்த 3ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தற்போது  தேர்தல் நடைபெறும் சூழல் என்பதால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக  நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். 


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை, இடைக்கால நிவாரணம் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் எனக் கூறியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க கூடாது என அமலாக்கத்துறை சார்பில் கோரிக்க வைக்கப்பட்டது. கெஜ்ரிவால் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில்  கடும் வாதப் பிரதிவாதங்கள் இன்று இடம் பெற்றன. அதைத் தொடர்ந்து விசாரணை நாளை மறுநாள் 9ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்தது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்