முடிந்தது 9 மாத தவிப்பு.. தரையிறங்கிய டிராகன்.. புன்னகையுடன் பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்

Mar 19, 2025,06:30 PM IST

வாஷிங்டன்: சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோர் ஆகிய இரு விண்வெளி வீரர்கள் மற்றும் நிக் ஹேக், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய மேலும் இரு வீரர்களுடன் அமெரிக்காவின் டிராகன் விண்கலம் பத்திரமாக பூமிக்கு வந்து சேர்ந்தது. 


டிராகன் விண்கலம் புளோரிடா கடல் பகுதியில் இறங்கியதும் அதிலிருந்த நான்கு விண்வெளி வீரர்களும் வெளியில் அழைத்து வரப்பட்டனர். புன்னகையுடனும், உற்சாகத்துடனும் காணப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், கையை அசைத்தவாறே வெளியில் வந்தார்.




இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணியளவில் டிராகன் விண்கலமானது பூமிக்குள் வந்து சேர்ந்தது. புளோரிடா கடல் பகுதியை நெருங்கியதும் டிராகன் விண்கலமானது பாராசூட் மூலம் கடலில் இறங்கியது.  அந்த இடத்தில் ஏகப்பட்ட டால்பின்கள் விளையாடியபடி காணப்பட்டன. டிராகன் விண்கலம் வந்து இறங்கியதும் அதையும் டால்பின்கள் சுற்றி வந்தது பார்க்க வித்தியாசமாக இருந்தது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோருக்கு டால்பின்கள் வரவேற்பு அளித்தது போல அந்தக் காட்சி இருந்தது.


டிராகன் விண்கலம் பின்னர் சிறிய கப்பல் மூலம் மீட்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து டிராகன் விண்கலத்துக்குள் இருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நான்கு பேரும் ஸ்டிரெச்சர் மூலம் வெளியே அழைத்து வரப்பட்டனர். ஒவ்வொருவரும் புன்னகையுடனும், உற்சாகத்துடனும் வெளியில் வந்தனர். குறிப்பாக கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வந்த சுனிதாவும், புச் வில்மோரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உற்சாகமாக காணப்பட்டனர்.


எட்டு நாட்கள் என்ற இலக்குடன் கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி இவர்கள் விண்வெளிக்குச் சென்றனர். ஆனால் 9 மாத தவிப்புக்குப் பின்னர் தற்போது திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


காத்திருக்கும் சவால்கள்




பூமிக்குத் திரும்பி விட்டாலும் கூட, பூமியின் இயல்பு நிலைக்குத் திரும்பி சுனிதாவும், வில்மோரும் பல்வேறு சவால்களை தாண்டி வர வேண்டியிருக்கும். குறைந்தது 6 மாத காலம் இதற்குப் பிடிக்கும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடலாம்.


எலும்பு சிதைவு, சதை சிதைவு, கதிர்வீச்சு தாக்கம், கண் பார்வையில் பிரச்சினை என பல சவால்களை அவர்கள் சந்திக்க நேரிடும். இது வழக்கமாக, விண்வெளி வீரர்களுக்கு வரும் சிக்கல்தான். அதிலும் நீண்ட காலம் விண்வெளியில் இருப்போருக்கு இது கூடுதலாகவே  இருக்கும். இவர்கள் சுயமாக எழு்ந்து நிற்பதும், நடப்பதும் கூட சில காலத்துக்கு சிரமமாக இருக்கும். 


விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் நீண்ட காலம் இருந்து விட்டு, பூமிக்குத் திரும்பும்போது அதற்கேற்ற சூழலுக்கு மாறுவது கடினமாகும், சிரமமாகும். மேலும் ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் நீண்ட நாள் இருக்கும்போது எலும்பின் அடர்த்தி குறைந்து போய் விடும். இதனால் எலும்பு முறிவு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. 


விண்வெளியில் இருக்கும்போது மாதத்திற்கு சராசரியாக 1 சதவீத அளவுக்கு எலும்பு அடர்த்தி குறைந்து வரும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.  பூமியில் இருப்பது போல நம்மால் விண்வெளியில் இருக்க முடியாது. பூமியில் இருக்கும்போது எல்லா வேலைகளும் ஈர்ப்பு விசையால் கட்டுப்படுத்தப்படுவதால் உடல் உறுப்புகள் சரியாக இருக்கும். ஆனால் விண்வெளியில் அப்படி இல்லை. மொத்தமாக நேர் மாறாக இருக்கும். அங்கு கடின வேலைகளுக்கு வாய்ப்பே இல்லை. எனவே தசை சிதைவு, எலும்பு சிதைவு போன்றவற்றுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.


பூமிக்குத் திரும்பிய பின்னர் விண்வெளி வீரர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகளையும், தேவைப்படும் உதவிகளையும் நாசா செய்து தரும். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் இந்த பயிற்சிகள் இருக்கும். எப்படி இருப்பினும் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்ப 6 மாதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்