டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் துணை நிற்கிறது. அவரை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைக்க முடியாது என்று அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக நடந்த பொதுக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி சுனிதா கெஜ்ரிவால், திருச்சி சிவா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் இதில் கலந்து கொண்டு பேசினர். அனைவருமே பாஜக அரசு அகற்றப்பட வேண்டும் என்று ஒரே குரலில் கோரிக்கை வைத்துப் பேசினர்.
இந்த கூட்டத்தில் சுனிதா கெஜ்ரிவாலின் பேச்சில் ஆக்ரோஷம் தெறித்தது. நாட்டு மக்களுக்கு கெஜ்ரிவால் அளித்துள்ள 6 உத்தரவாதங்களையும் இக்கூட்டத்தில் தெரிவித்தார் சுனிதா கெஜ்ரிவால். அவரது பேச்சிலிருந்து சில:
இந்திய மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத் துணை நிற்கிறார்கள். அவரை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைக்க முடியாது. உஙகளிடமிருந்து நான் ஓட்டு கேட்கவில்லை. தேர்தலில் இவரை தோற்கடியுங்கள், அவரைத் தோற்கடியுங்கள் என்று கூட கேட்கவில்லை. மாறாக 140 கோடி இந்தியர்களும் இந்த நாட்டை முன்னேற்றிக் கொண்டு செல்ல உதவுங்கள் என்றுதான் கோருகிறேன். இது எனது கணவர் சிறையிலிருந்து அனுப்பியுள்ள கோரிக்கையாகும்.
இந்த கூட்டணியின் பெயரில் மட்டும் இந்தியா இல்லை. மாறாக, இதயத்திலும் இந்தியாவாக உள்ள கூட்டணி இது. கெஜ்ரிவால் 6 உத்தரவாதங்களைத் தெரிவித்துள்ளார். அதை இங்கே வாசிக்கிறேன்.
1. நாடு முழுவதும் மின்வெட்டே இல்லாத நிலையை உருவாக்குவோம். 2. நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். 3. ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக்கூடம் அமைக்கப்படும். அங்கு சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் தரமான இலவசக் கல்வி அளிக்கப்படும். 4. ஒவ்வொரு கிராமத்திலும் மொகல்லா கிளினிக் அமைக்கப்படும். அதேபோல ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் அரசு சார்பில் நவீன மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்படும். 5. விவசாயிகளுக்கு சிறந்த குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்டு, அமல்படுத்தப்படும். 6. டெல்லி மக்களுக்கு நீண்ட காலமாக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இது சரி செய்யப்படும். டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் உத்தரவாதம் அளித்துள்ளார்.
இந்த உத்தரவாதங்களையெல்லாம் ஐந்து வருடங்களில் நிறைவேற்றுவோம் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் என்று சுனிதா கெஜ்ரிவால் பேசினார்.
கல்பனா சோரன் ஆவேசம்
இந்த கூட்டத்தில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனும் கலந்து கொண்டார். ஹேமந்த் சோரனும், கெஜ்ரிவாலைப் போலவே அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் கல்பனா சோரன் பேசும்போது, இந்த நாட்டின்50 சதவீத பெண்களின் சார்பாகவும், 9 சதவீத பழங்குடியின மக்கள் சார்பாகவும் இங்கு வந்துள்ளேன். இந்த போராட்டம் வரலாற்றில் இடம் பிடிக்கும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இங்கு அனைவரும் வந்துள்ளோம். நாம் அனைவரும் இங்கு திரண்டிருக்க ஒரே காரணம், சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில்தான் என்று ஆவேசமாக பேசினார் கல்பனா சோரன்.
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
{{comments.comment}}