உன்னை விட்டு விலகுவதுமில்லை .. உன்னை கைவிடுவதுமில்லை!

Oct 15, 2023,10:59 AM IST

-  மீனா


உன்னை விட்டு விலகுவதுமில்லை .. 

உன்னை கைவிடுவதுமில்லை!


யோசுவா 1:5


ஒரு தந்தை தன் இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு தான் வசிக்கும் இடத்திற்கு ஒரு ஆற்றை கடந்து செல்ல வேண்டியதாய் இருந்தது. ஆனால் அது மாலை நேரம் முடிந்து இரவு நேரம் ஆரம்பிக்கும் தருணம் . அவர்கள் கடக்க ஆற்றின் அருகில் வந்த போது அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் வழக்கமான அளவைவிட தண்ணீரின் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது.


அப்பொழுது அந்த தந்தை ஆற்றை கடக்க நினைத்து தன்னுடைய இரு மகன்களின் கைகளையும் இறுக பிடித்துக் கொண்டிருந்தார் . ஆனால் அவருடைய மூத்த மகன்  அவருடைய கைகளை பிடிக்காமல், அவன் தன் தந்தையை தன்னுடைய கையை இறுக  பற்றிக் கொள்ளுமாறு கூறினான். ஆனால் இளைய மகனோ தந்தை அவனுடைய கையை பிடிக்க வந்ததையும் உதறிவிட்டு, தான் இந்த ஆற்றின் வெள்ளப்பெருக்கில் இலகுவாக கடந்து வந்துவிடுவேன். நீங்கள் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று அவரிடம்  கூறிவிட்டான். 


கவலை அடைந்த  தந்தையோ வேறு வழி இன்றி எதுவும் பேசாமல் , சரி கவனமாக இரு என்று கூறி மூன்று பேரும்  சேர்ந்து ஆற்றை கடக்க முயன்றனர். ஆற்றை கடந்து அக்கரைக்கு போவதற்கு முன்பாக ஆற்றின் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்தது. அப்போது  தந்தை தன்னுடைய கையை இறுகப்பற்றிக் கொண்டிருப்பதால் மூத்த மகன் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருந்தான். ஏனென்றால் நாம் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு இருந்தால் கூட ஏதாவது ஒரு தருணத்தில் குறைவான பலத்தின் காரணமாக விட்டுவிட கூடும். ஆனால் நம்முடைய கையை தந்தை பிடித்துக் கொண்டிருந்தால் எந்த தருணத்திலும் நம்மை அவர் விட்டுவிட மாட்டார் என்ற நம்பிக்கை அந்த மூத்த மகனுக்கு 


ஆனால் தந்தையின் கையை பிடிக்காமல் தானாக வந்து விடலாம் என்று எண்ணிய இளைய மகன் அந்த வெள்ளப்பெருக்கில் ஏற்படும் அபாயத்தை உணராமல் இருந்ததினால், இளைய மகன் தண்ணீரின் அதிகரிப்பு காரணமாக அவன் அந்த ஆற்றில் இருந்து  தண்ணீரினால் இழுத்துச் செல்லப்பட்டான் . அப்போது அப்பா "என்னை காப்பாற்றுங்கள் "என்று தன் இளைய மகனின் குரலை கேட்டு அவனின் தந்தை வேகமாக சென்று தன்  மகனின் ஜீவனுக்கு ஏதுவான எந்த பிரச்சனையும் ஏற்படாதவாறு அவனை காப்பாற்றினார். 


அன்பானவர்களே, இதைப் போல் நீங்களும் கூட வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் அதிகமான பிரச்சனைகள், பாடுகள் மத்தியில் நம்மை இதிலிருந்து யாராவது மீட்க மாட்டார்களா என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் என் நண்பன் எனக்கு உதவி செய்வான் என்று நம்பி இருந்த உங்களை உங்கள் நண்பர் கைவிட்டு விட்டாரா அல்லது நீங்கள் அதிகமாக நேசித்தவர் உங்களுக்கு நம்பகத்தன்மை இல்லாத வகையில் நடந்து கொண்டாரா இப்படி இருக்கும் பட்சத்தில் உங்கள் நம்பிக்கை மனிதர்கள் மேல் இருந்தால் அவர்களிடம் இருந்து நமக்கு ஏமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள்  இருக்கும். 




அவர்களும் மனிதர்கள் தான் எந்த சூழ்நிலையிலும் நம்மை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையை உடைக்கும் நிலை அவர்களுக்கும் ஏற்படலாம். அப்பொழுது நான் தேவனை நோக்கி "கர்த்தாவே என்னை காப்பாற்றும்" என்ற ஒரு வார்த்தை உங்களுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் இஸ்ரவேல் ஜனங்களை மோசே வழிநடத்தி வரும்போது  வயதின் முதிர்ச்சி  காரணமாக மோசே மரிக்க வேண்டியதாயிருந்தது.


பிறகு மோசேயின் மறைவுக்குப் பின்பு தன்னுடைய ஜனங்களான இஸ்ரவேல் மக்களை வழிநடத்த யோசுவாவை கர்த்தர் ஏற்படுத்தினார். அப்பொழுது யோசுவாவை பார்த்து அவர் சொன்ன வார்த்தை "உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை" என்று நம்பிக்கை கொடுத்து, மோசையோடு நான் இருந்தது போல உன்னோடும் இருப்பேன் என்றும் வாக்கு பண்ணினார். அந்த வாக்குத்தத்தை யோசுவாவின் வாழ்க்கையில் அவர் நிறைவேற்றினார்.


வாழ்க்கையில் நாம் எவராவது நமக்கு உதவி செய்ய மாட்டார்களா என்று நினைத்துக் கொண்டே இருக்கும் தருணத்தில் கூட மனிதர்கள் எல்லாரும் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அப்போதும் கர்த்தர் உன்னோடு நான் கூட இருந்து உன்னை வழி நடத்துவேன் என்று நமக்கு வாக்கு பண்ணியிருக்கிறார். அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராகவே இருந்து எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நம்மை காக்கும்படி நம்மோடு எப்போதும் இருக்கிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறார்.


நாமும் கூட மனிதர்கள் யாரும் நமக்கு உதவி செய்யவில்லையே, நம்மிடம் பணம், வசதி இல்லாத காரணத்தினால் நம்மை யாரும் மதிப்பதில்லை என்று சோர்ந்து போகாமல் எப்போதும் மாறாதவராய் இருக்கிற தேவனை பற்றிக் கொண்டிருந்தால் எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் கஷ்டங்கள், பாடுகளின் மத்தியில் மூழ்கி போகாமல் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நமக்கு தேவன் உதவி செய்கிறார் என்பதனை உணர வேண்டும்.


ஆகையால் தேவனையே அண்டி கொள்வது நலம் என்பதனை உணர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ தேவனுடைய கிருபை எப்போதும் நமக்கு உண்டு என்பதனை நாம்  நினைவில் கொள்ள வேண்டும். இவன் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டான் என்று மனிதனை குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு தேவனிடம் வேண்டுதல் செய்யும் போது அதே மனிதர்களாலே நமக்கு நன்மை செய்யும்படி தேவனால் சூழ்நிலைகளை நமக்கு சாதகமாக மாற்றி அமைக்க கூடும். ஆகையால் நாமும் கூட தேவனுடைய கைகளை இறுக பற்றிக்கொண்டு நம் வாழ்க்கையில் ஏற்படும் பாடுகள், பிரச்சனைகள் போன்ற  பலவித சோதனைகளுக்குள் மூழ்கி விடாமல் எப்பொழுதும் விழித்திருந்து பிரார்த்தனை செய்வோமாக. தேவன் நம்மை ஒரு போதும் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளையும் கடந்து போக அவர் நமக்கு இரக்கம் செய்வார் .


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்