கூகுளில் சேர்ந்து 20 வருஷமாச்சு.. இன்னும் அதிர்ஷ்டசாலியாகவே உணர்கிறேன்.. சுந்தர் பிச்சை ஹேப்பி!

Apr 27, 2024,05:11 PM IST

கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தில் பணியில் சேந்து 20 ஆண்டுகள் முடிந்துள்ளதாகவும், தொழில்நுட்பம்,  பயனாளர்கள் என தொடங்கி தனது தலைமுடி வரை மாறி விட்டதாகவும் இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டுள்ளார் அந்நிறுவன தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை.


கூகுளை  கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். எதையாவது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் உடனே கூகுளை தட்டி விட்டால் போது, நம் எதைப் பற்றி தேடுகிறோமே அதை பற்றிய அனைத்தும் ஆதி முதல் அந்தம் வரை வந்துவிடும். அதனால் தான் நம்மில் பெரும்பாலனவர்கள் கூகுளாண்டவர் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். அத்தகைய கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் தான் சுந்தர் பிச்சை.




தமிழர்களின் ஆற்றலை உலகம் அறியச் செய்த ஆயிரக்கணக்கான மனிதர்களில் சுந்தர் பிச்சையும் ஒருவர். மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர் 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார்.  ஆரம்பத்தில் சிறிய வேலையில் இருந்த இவர் தற்பொழுது அதன் சிஇஒவாக உயர்ந்துள்ளார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13ம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார்.


இந்த நிலையில்,  தான் கூகுளில் இணைந்து 20 வருடங்கள் ஆனதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ஏப்ரல் 2, 2004 கூகுளில் எனது முதல் நாள். அதன் பிறகு நிறைய மாறிவிட்டது. தொழில்நுட்பம், எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை. என் தலைமுடி. என்ன மாறவில்லை. இந்த அற்புதமான நிறுவனத்தில் பணிபுரிவதில் நான் பெருமைப்படுகிறேன். 20 ஆண்டுகள் ஆகியும் நான் இன்னும் அதிர்ஷ்டசாலியாகவே உணர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


உங்க தலைமுடி மட்டுமா மாறிருக்கு.. உலகமே மாறிப் போச்சு பிச்சை சார்.. இந்த கூகுளால!

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்