அரண்மனை 4 .. மிரள வைக்கும் பர்ஸ்ட் லுக்.. பொங்கலுக்கு வருது!

Sep 30, 2023,12:43 PM IST

சென்னை: அரண்மனை 4 பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளது. மிரட்டும் வகையிலான பர்ஸ்ட் லுக்கும் கூட படக் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.


இயக்குநர் சுந்தர்.சிக்கு பெரும் பெயர் பெற்றுக் கொடுத்த படங்கள் வரிசையில் அரண்மனைக்கும் முக்கிய இடம் உண்டு. இதில் முதல் இரு பாகங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 3வது பாகம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. ஆனால் படம் பேசப்பட்டது. இந்த நிலையில் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தைக் கையில் எடுத்துள்ளார் சுந்தர் .சி.




அரண்மனை 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்தை  பொங்கலுக்கு திரைக்குக் கொண்டு வரவுள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளன. சுந்தர்.சியின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாதான் அரண்மனை 4 படத்திற்கு இசையமைக்கிறார். 


சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


2014ம் வருடம் அரண்மனை 1 வெளியானது. இதில் ஆன்ட்ரியா, வினய் நடித்திருந்தனர். இந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டடித்தது. அதைத் தொடர்ந்து 2016ல் அரண்மனை 2 படத்தை எடுத்தார் சுந்தர் .சி. அதில் நாயகனாக சித்தார்த் நடித்திருந்தார். இப்படமும் வசூலில் சாதனை படைத்தது. அதன் பின்னர் அரண்மனை 3ம் பாகம், 2021 ல் ஆர்யா, ராஷிகண்ணா, சாக்ஷிஷி அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது. 


இந்த நிலையில் அரண்மனை 4 ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குஷ்புவின் பிறந்த நாளான நேற்று இப்படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!

news

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்

news

சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

news

விண்ணை பிளக்கும் உற்சாகத்துடன் வெளியான குட் பேட் அக்லி.. விழா கோலம்பூண்ட திரையரங்குகள்..!

news

Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

news

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

news

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்