டிசம்பர் 12ம் தேதி இல்லை.. நவம்பர் 12ம் தேதியே ரஜினி பிறந்த நாளைக் கொண்டாடும் "சன்"!

Nov 06, 2023,06:34 PM IST

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் டிசம்பர் 12ம் தேதி வருகிறது. அவர் லேட்டஸ்டாக நடித்த ஜெயிலர்  படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் ஜெயிலர் படத்த நவம்பர் 12ம் தேதி தீபாவளியன்று ஒளிபரப்பவுள்ளது சன் டிவி.


இதன் மூலம் ரஜினிகாந்த் பிறந்த நாளை தீபாவளியேன்றே அட்வான்ஸாக கொண்டாடுகிறது சன் டிவி. சன் பிக்சர்ஸ் தயாரித்த படம்தான் ஜெயிலர் என்பது நினைவிருக்கலாம்.


ரஜினிகாந்த், தமன்னா, விநாயகன், மாரிமுத்து உள்ளிட்டோர் நடிக்க, நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவான பிரமாண்டப் படம்தான் ஜெயிலர். மிகப் பெரிய வசூலைப் பெற்று அசத்திய படம் ஜெயிலர்.




ஜெயிலர் படத்தைத்  தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் ஒரு படம் செய்கிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார். தற்போது ஞானவேல் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அதை முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவுள்ளார்.


இந்த நிலையில் ஜெயிலர் படம் சன் டிவியில் நவம்பர் 12ம் தேதி தீபாவளியன்று ஒளிபரப்பப்படவுள்ளது. சரியாக ஒரு மாதம் கழித்து டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் வருகிறது. இதனால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். ரஜினியின் பிறந்த நாளை அட்வான்ஸாக ஒரு மாதத்திற்கு முன்பே தீபாவளியுடன் சேர்த்து ரஜினி ரசிகர்களை குளிர்விக்கவுள்ளது சன் டிவி.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்