சென்னை: ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது அடுத்த படைப்பாக இயக்கி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படம் ரஜினிக்கு 171 வது படமாகும். இவருடன் ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர் கான் என பல்வேறு மொழிகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த தயாரிப்பு நிறுவனம் கூலி படத்தின் அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி இப்படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் கிளிப்ஸ் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக அறிவித்திருந்தது. ஆனால் படம் எப்போது வெளியாகும் என்று அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனால் படத்தின் வெளியீடு குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆனால் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாகவே ஓடிடி உரிமத்தை அமேசான் நிறுவனம் 120 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள கூலி படத்தின் முக்கியமான அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முக்கிய அறிவிப்பானது படத்தின் வெளியிட்டு தேதியாக இருக்குமோ என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}