ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. 4 மொழி சாட்டிலைட் ரைட்ஸும்.. சன் குரூப்புக்கே!

Oct 26, 2023,03:55 PM IST
- மஞ்சுளா தேவி

சென்னை:  தீபாவளியன்று வெளியாகப் போகும் ஜிகர்தண்டா  டபுள் எக்ஸ் படத்தின் சாட்டிலைட் உரிமைகளை சன் குழும தொலைக்காட்சி சானல்களே பெற்றுள்ளன.

சன் குழுமத்திற்குச் சொந்தமான சன் டிவி, கன்னடத்தின் உதயா டிவி, தெலுங்கில் ஜெமினி டிவி மற்றும் மலையாளத்தில் சூர்யா டிவி ஆகியவற்றுக்கே ஜிகர்தண்டா 2வது பாகத்தின் சாட்டிலைட் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பீட்சா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் பல குறும்படங்களை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் ஜிகர்தண்டா. இதில் சித்தார்த், லட்சுமிமேனன், பாபி சிம்ஹா, கருணாகரன் உள்ளிட்டோர்  நடித்துள்ளனர். மதுரையை மையமாகக் கொண்ட கதைக்களம் என்பதால் இப்படம் நல்ல வரவேற்பு பெற்று ஹிட் கொடுத்து. இப்படத்திற்காக பாபி சிம்ஹா சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.



ஜிகர்தண்டா படம் வெளிவந்து எட்டு ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்தது. 
இதில் இடம் பெற்ற "டேய் இது சினிமா டா" என்ற வசனம் பிரபலமாகி வைரலானது.

நடிகராகவும், டான்ஸ் மாஸ்டராகவும் வலம் வரும் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிப்பு அரக்கன் என பெயர் பெற்ற எஸ். ஜே சூர்யாவும் இப்படத்தில் வித்யாசமான தோற்றத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் 1975 ஆம் ஆண்டு நடக்கும் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இதில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் கேங்ஸ்டர் ஆகவும், எஸ். ஜே சூர்யா இயக்குனராகவும் நடித்துள்ளனர். இப்படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டுள்ளதால் இப்படத்தை பலரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்