என் உச்சி மண்டையில சுர்ருங்குது.. காரணம் வெயில் பாஸ்.. முடிஞ்சா இதெல்லாம் சாப்பிட்டுப் பாருங்களேன்!

Mar 03, 2025,05:12 PM IST

சென்னை: நடு மண்டையில் நச்சென்று சுத்தியலால் அடித்தாற் போல இருக்கிறது வெயிலின் கொடுமை. வெளியில் பார்க்கவே முடியவில்லை. அப்படிப் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார் சூரியனார். இப்படிப்பட்ட நேரத்தில்தான் நாம கொஞ்சம் கவனமா இருக்கணும். இல்லாட்டி பாடி டிரை ஆகி பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.


கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்று நிறைய இருக்கு. அதெல்லாம் நாம முடிந்தவரை பாலோ செய்தால் ஹெல்த்துக்கு நல்லது. அதைப் பற்றிப் பார்ப்போமா.


தர்பூசணி: தர்பூசணி பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலை குளிர்ச்சியாகவும், நீர்ச்சத்து குறையாமலும் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், சூரிய ஒளியினால் ஏற்படும் சரும சேதத்திலிருந்தும் நம்மை தர்பூசணி பாதுகாக்கும். ஜூஸ் போட்டும் குடிக்கலாம், அப்படியே கடிச்சும் சாப்பிடலாம்.


கிரீன் டீ: கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. சர்க்கரை நிறைந்த குளிர்பானங்களை அருந்துவதற்குப் பதிலாக, கிரீன் டீ குடிப்பது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடல் எடையும் கூட கிரீன் டீ சாப்பிட்டால் குறையும் என்கிறார்கள். குடிச்சுதான் பாருங்களேன்.


சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இதயத்திற்கு நன்மை தருகிறது. கோழிக்கறி சாப்பிடுவதற்குப் பதில் வெயில் காலத்தில் மீன் சாப்பிட்டால் ரொம்ப நல்லது. 


பெர்ரி பழங்கள்: ப்ளூ பெர்ரி, பிளாக் பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இவை சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.




தயிர்: தயிரில் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருவதுடன், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தயிரை அப்படியே குடிக்கப் பிடிக்காவிட்டால் அதை மிக்ஸியில் அடித்து கொஞ்சம் போல உப்போ அல்லது சுகரோ சேர்த்து லஸ்ஸி போலவும் குடிக்கலாம்.


மோர்: மோர் தாகத்தைத் தணிக்க உதவும் அற்புதமான பானம். இதில் பச்சை மிளகாய், சிறிது சீரகம், உப்பு மற்றும் கொத்தமல்லியை சேர்த்து குடிப்பது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. நல்ல வெயிலுக்கு இதமான மண்பானை மோர் குடிச்சுப் பாருங்க.. செம்மையா இருக்குங்க!


தேங்காய் பால்: தேங்காய் பால் ஒரு சுவையான மற்றும் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும் பானம். இதில் எலக்ட்ரோலைட்டுகள் அதிகம் உள்ளன. வயிற்றுக்கும் நல்லது. வயிற்றுப் புண் உள்ளவர்கள் இதை அவ்வப்போது எடுத்துக் கொள்வது நல்லது.


ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் உடலுக்கு தேவையான சர்க்கரை நிறைந்துள்ளன. கோடைக்காலத்தில் ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை தரும்.


மாம்பழம்: கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் பழங்களில் ஒன்று மாம்பழம். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு சக்தி தருகின்றன. மாங்கனி ஜூஸ் குடிப்பது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.


புதினா: புதினாவில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. புதினா இலைகளை சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தி உடல் சூட்டினை குறைக்கிறது.


வாழைப்பழம்: வாழைப்பழம் வைட்டமின் B6 மற்றும் C நிறைந்துள்ளது. கோடைக்காலத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது உடலின் உளப்பகுதியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. வெயில் காலத்தில் நிறையப் பேருக்கு மலச்சிக்கல் பிரச்சினை வரும். எனவே வெயில் காலத்தில் கண்டிப்பாக வாழைப்பழம் சாப்பிடுவது அவசியம்.




எலுமிச்சை: எலுமிச்சையில் வைட்டமின் C அதிகம் உள்ளது. எலுமிச்சை ஜூஸ் குடிப்பது தாகத்தைத் தணிக்கவும், உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. உடல் உஷ்ணத்தைக் குறைக்க எலுமிச்சம்பழம் ஜூஸ் சாப்பிடலாம். ஜஸ்ட் லெமனைப் பிழந்து அதில் கொஞ்சம் போல சுகர் கலந்து குடிச்சாலே போதும். 


தக்காளி: தக்காளியில் லைகோபீன் உள்ளது. இது உடலின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. தக்காளியை ராசம் மற்றும் சாலட் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். 


முலாம்பழம்: முலாம்பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதனை சாப்பிடுவது தாகத்தைத் தணிக்கவும், உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.


இதுதவிர வெயில் காலத்தில் தினசரி கீரை வகைகளை எடுத்துக் கொள்வது நல்லது. அதிக அளவில் தண்ணீர் குடியுங்கள். தயவு செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தண்ணீரோ அல்லது கூல் டிரிங்ஸோ குடிப்பதோ கூடவே கூடாது. அது கிட்னியைப் பாதிக்கும். எனவே மண்பானையை வைத்துக் கொண்டு அதில் தண்ணீரை ஊற்றி வைத்து அதைக் குடியுங்கள். உடம்புக்கு நல்லது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இவன் என்ன அழைப்பது.. நாம் என்ன போவது.. என்று கௌரவம் பார்க்காதீர்கள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

news

வெயிலை சமாளிக்க தயாராகுங்க மக்களே.. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் வெயில் சுட்டெரிக்குமாம்!

news

நடிகர் சிவாஜிகணேசன் வீட்டை ஜப்தி செய்ய.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

நீங்க ஒர்க்கிங் பேரன்ட்டா.. காலையிலேயே டென்ஷனாகுதா.. Chill ப்ளீஸ்.. சிம்பிளா சில டிப்ஸ்!

news

10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு: மாணவர்கள் புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு!

news

லாட்டரி சீட்டு போலதான் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் பதவி கிடைத்தது: டிடிவி தினகரன் பேட்டி!

news

2025 ஆஸ்கர் விருதுகளில்.. 5 விருதுகளை அள்ளிக் குவித்த.. அனோரா திரைப்படம்!

news

சீமானுக்கு எதிரான வழக்கு... இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.. உச்ச நீதிமன்றம்!

news

என் உச்சி மண்டையில சுர்ருங்குது.. காரணம் வெயில் பாஸ்.. முடிஞ்சா இதெல்லாம் சாப்பிட்டுப் பாருங்களேன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்