"கோவிந்தா கோவிந்தா".. திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. கோடை விடுமுறை எதிரொலி!

May 18, 2024,08:53 AM IST

திருப்பதி: கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றது.


திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பர். திருப்பதி ஒரு வைணவ திருத்தலமாகும். இந்தியாவில் உள்ள முக்கிய கோவில் தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.  வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் இங்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இங்கு வரும் பக்தர்கள் பல மணி நேரம் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 




கோடை காலத்தில் இங்கு வரும் பக்தர்களுக்காக பல வசதிகள் செய்யப்பட்டள்ளன. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி இந்த மாதத் தொடக்கத்தில் கூறுகையில், கோடை விடுமுறையில் திருமலை தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


உணவு, மோர், குடிநீர், காலை உணவு மற்றும் மருத்துவ வசதிகள் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கோவில் வீதிகளில், பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள  பகுதிகள் அனைத்திலும் வெயிலின் உஷ்ணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில் பந்தல், கூல் பெயிண்டுகள், கார்பெட்டுகள் அமைத்துள்ளோம்.  அவ்வப்போது தண்ணீரை தரையில் தெளிக்கின்றோம்.


நாராயணகிரி தோட்டங்கள் மற்றும் கோவில் சுற்றுப்புறங்களில் பக்தர்கள் ஓய்வெடுக்க தற்காலிக கொட்டகைகள் அமைத்துள்ளோம். திருப்பதி ஏழுமலையான் கோவில் கோடை விடுமுறை காரணமாக சாமி தரிசனத்திற்கு வரும் சாமானி பக்தர்களுக்கு முன்னரிமை அளிக்கப்படுகிறது. இதனால் கோடைகாலம் முழுவதும் விஐபி தரிசனத்திற்கான சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.


இந்நிலையில்,  கடந்த சில தினங்களாக திருப்பதியில் கோடை விடுமுறையை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. கோடைகாலத்தில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்ட நிலையிலும், 5 கிலோமீட்டர் தூரம் நின்று, 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!

news

தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவு தினம்.. மதுரையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்!

news

கந்த சஷ்டி விரதம் 2024 : கோவிலுக்குப் போகாமல்.. வீட்டிலேயே எளிமையாக விரதம் இருக்கும் முறை

news

கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

news

கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!

news

மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!

news

35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி

news

வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

news

சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்