ஹய்யா ஜாலி.. விட்டாச்சு லீவு.. ஜாலி மூடில் குட்டீஸ்.. கவலையில் பெற்றோர்.. எப்படி சமாளிக்கலாம்?

Apr 07, 2024,05:28 PM IST

அப்பாடா ஸ்கூல் லீவு விட்டாச்சு..  இனி ஒரே ஜாலிதான் என்று குழந்தைகள் ஜாலியாக இருக்கின்றார்கள். ஆனால் பெற்றோர்களோ வாரத்தில் இரண்டு நாள் விடுமுறையிலேயே நம்மை படுத்தி எடுத்து விடுவார்கள் ஒரு மாத கோடை விடுமுறையை எப்படி சமாளிக்கப் போகின்றோம் என்று அச்சத்தில் இருக்கின்றார்கள்.


பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள், குறிப்பாக வேலைக்குப் போகும் பெற்றோர், வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என்ற காலம் மாறி எந்த குழந்தை பெற்றாலும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. அந்த அளவுக்கு குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது பெற்றவர்களின் மிகப் பெரிய சவாலாகி விட்டது. 


சரி அதை விடுங்க.. இந்த சம்மர் வெகேஷனை உருப்படியா கழிக்க சில ஐடியாக்கள் சொல்றோம்.. கேளுங்க.. செல்போனை ஒரு ஓரமாக வைத்துவிட்டு குழந்தைகளுடன் வீட்டுக்குள்ளேயே சுவாரசியமான விளையாட்டுகளை எப்படி விளையாடலாம். என்னென்ன விளையாட்டுகள்  விளையாடலாம் .. வாங்க பார்ப்போம்.


கேரம் போர்டு:




இந்த காலத்துல கேரம்போர்டு விளையாட தெரியாதவங்களை பார்க்கவே முடியாது. ஏன்னா அந்த அளவுக்கு எல்லாரும் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா ஆன்லைனில் விளையாட ஆரம்பிச்சிட்டாங்க. எவ்வளவுதான் ஆன்லைன்ல விளையாண்டாலும் அம்மா அப்பா நண்பர்களோட சேர்ந்து குடும்பமா விளையாடுவதில்லை கிடைக்கிற சந்தோஷமே தனி. கேரம் போர்டு விளையாடுவது நம்மளோட பிரைன் டெவலப்மெண்ட்டுக்கு ரொம்ப பயனுள்ளதாக உள்ளது.


சதுரங்கம்:


செஸ் (சதுரங்கம்) விளையாட்டும் ரொம்ப சுவாரஸ்யமாக தான் இருக்கும். நம்மளை நாமே புத்திசாலின்னு நிரூபிக்கிறது போல ஒரு பீலிங்ஸ் இருக்கும். இந்த விளையாட்டு நம்முடைய படை வீரர்களை களத்தில் இறக்கி கடைசி வரை போராடுவதில் இருக்கிற சுவாரஸ்யம் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். மேலும் நம்மளுடைய கவனம் சிதறாமல் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் கடைசி வரை விளையாடுவோம். இதை உங்கள் குழந்தைகளுடன் விளையாடும் போது அவர்கள் மூளையை வேலை செய்ய வைக்கும்.


பல்லாங்குழி:


எதிரியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடனே போராடுவதுதான் இந்த விளையாட்டின் உடைய சுவாரஸ்யம்.


பரமபதம்:




இதை பாம்பு விளையாட்டு என்று சொல்லுவோம். பரமபதம்  போர்ட் பார்த்தாலே ரொம்ப அழகா இருக்கும். இதுல என்ன சுவாரஸ்யம்னா ஏணி பக்கத்துல வந்தா ஏணி வழியா நம்ம சீக்கிரமா மேல போயிரலாம். அதேசமயம் பாம்பு பக்கத்தில் வந்தால் பாம்பு கொத்தி கீழே இறங்கி விடுவோம். இப்படித்தான் இந்த விளையாட்டு விளையாட வேண்டும். இந்த விளையாட்டை பொருத்தவரை முழுக்க முழுக்க நம்முடைய அதிர்ஷ்டத்தை பொறுத்தே இருக்கும். 


இந்த விளையாட்டினுடைய குறிக்கோள் நம்முடைய முன்னேற்ற பாதையில் ஏராளமான தடைகள் வந்தாலும் நாம் முன்னேறிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இதையும் நம்முடைய குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் பொழுது ரொம்ப சுவாரசியமாக இருக்கும்.


மியூசிக்கல் சேர்:


மியூசிக்கல் சேர் பத்தி சொல்லவே வேண்டாம் அந்த அளவுக்கு ஜாலியாக இருக்கும். அதில் நான்கு நபர்களுக்கு மூன்று சேர் வைக்க வேண்டும். மியூசிக் ஸ்டார்ட் ஆனதும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். மியூசிக் நின்னதும் சேரில் உட்கார வேண்டும்.கடைசி ஒருத்தருக்கு ஷேர் கிடைக்காது.  சேர் இல்லாதவர்கள் விளையாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும். இந்த விளையாட்டும் நல்ல ஒரு பொழுதுபோக்காக இருக்கும்.


இது போக குழந்தைகளுக்கு பாடல் கற்று கொடுக்கலாம். நடனம் கற்றுக் கொடுக்கலாம். டிராயிங் கற்றுக் கொடுக்கலாம். அடுத்து இன்ட்ரஸ்டிங்கான கதை புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கலாம். அதுபோக வீட்டிலேயே செடி வளர்க்க கற்றுக் கொடுக்கலாம். ஈவினிங் ஸ்நாக்ஸ் போன்ற ஈஸியான சமையல்கள் கூட கற்றுக் கொடுக்கலாம்.




நாங்கள் 90's கிட்ஸ். எங்களுடைய பள்ளி பருவத்தின் விடுமுறை காலங்களில் என்னுடன் பயிலும் சக தோழிகளுடனும் நண்பர்களுடனும் திறந்தவெளிகளில் சென்று விளையாடுவோம். கோகோ, கபடி, கண்ணாமூச்சி, கள்ளன் போலீஸ், பல்லாங்குழி, தாயம் , பம்பரம் விடுதல் போன்ற விளையாட்டுகளை விளையாட்டு விடுமுறை நாட்களை சந்தோஷமாக கழிப்போம். மேலும் சக நண்பர்களிடம் அவரவர் வீட்டில் இருந்து அரிசி, காய்கறி, பருப்பு என எடுத்து வந்து கூட்டாஞ்சோறு சமைத்து உண்போம். அதில் கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவு கிடையாது.


நீங்களும் இதுபோல் உங்கள் குழந்தைகளுடன் விடுமுறை நாட்களை சந்தோஷமான பொழுதுபோக்கு நாளாக மாற்றிக் கொள்ளுங்கள். குழந்தைகளுடன் நாம் அதிக நேரம் விளையாடுவதன் மூலம் அவர்களுக்கு எதில் ஆர்வம் என்பதை ஈசியாக கண்டுபிடித்து விட முடியும். இனியாவது குழந்தைகளுடன் நம்முடைய நேரத்தை பயனுள்ளதாக செலவிடுவோம்.


கட்டுரை: சந்தனகுமாரி

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்